Swiggy , Zomatoல் இவ்வளவு பணம் இழக்கிறோமா? - இளைஞரின் கேள்விக்கு நிறுவனத்தின் பதில்

மிக எளிதாக மொபைலைத் தட்டி வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம். அதற்காக ஸ்க்ரீனில் தெரிகிற காசை அனுப்பி வைக்கிறோம். கேட்டால் நேர மிச்சம் என்கிறோம். ஆனால் மிச்சப்படுத்தும் நேரத்தில் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகமாக இழந்துகொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Delivery
DeliveryTwitter
Published on

நாம் என்ன தான் ஆடம்பரமான வாழ்வை மேற்கொண்டாலும் ஒரு கட்டத்தில் உழைப்பது, நமக்கு எல்லா வேளையும் சாப்பாடு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் என ஒத்துக்கொள்வோம். ஆனால் அந்த சாப்பாட்டுக்காக கூட நம்மை நகரவிடாமல் பிடித்து வைத்திருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை.

பல நேரங்களில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் சூழல் ஏற்படுகிறது. இதுவே நம்மில் பலருக்கு பழக்கமாகவும் மாறியிருக்கிறது.

மிக எளிதாக மொபைலைத் தட்டி வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம். அதற்காக ஸ்க்ரீனில் தெரிகிற காசை அனுப்பி வைக்கிறோம். கேட்டால் நேர மிச்சம் என்கிறோம்.

ஆனால் மிச்சப்படுத்தும் நேரத்தில் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகமாக இழந்துகொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரே உணவை ஒரே கடை ஆன்லைனிலும் நேரிலும் வாங்கியுள்ளார். விலையின் வித்தியாசத்தை சுட்டிக்காட்டி LinkedIn தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

சில உணவுகளை ஆர்டர் செய்த அவர், அதன் பில்களை புகைப்படமாக வெளியிட்டார். நேரில் வாங்கு போது 512 ரூபாய் பில் வந்த அதே உணவுகளுக்கு, ஆன்லைனில் 690 ரூபாய் (75 ரூபாய் ஆஃபர் போக) விலை செல்லப்பட்டது. அதாவது 34.6% (₹178) அதிகமாக விலை வந்துள்ளது.

இதனை சோமேட்டோ செயலியில் ஆர்டர் செய்திருந்ததால் விலையை சுட்டிக் காட்டி அந்த நிறுவனத்தை டேக் செய்திருந்தார். இதற்கு பலர் கமெண்ட் செய்யக் குவிந்தனர்.

அதில் ஒருவர், "நான் ஸ்விக்கியில் ஒரு உணவை ஆர்டர் செய்த போது 120 ரூபாய் டெலிவரி சார்ஜ் காட்டியது. இதனால் நான் நேரில் சென்று வாங்க முடிவெடுத்தேன். ஆச்சரியமாக நேரில் அதன் விலை 99 ரூபாய் தான். ஆனால் ஆன்லைனில் 140 ரூபாய்.

Delivery
கேக்குடன் Resume கொடுத்து வேலை கேட்ட சொமேட்டோ ஊழியர் - எங்கே?

இந்த இளைஞனின் பதிவுக்கு பதிலளித்த சோமேட்டோ, "ஹாய் ராகுல், உணவகங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பாலமாக மட்டுமே நாங்கள் செயல்படுகிறோம்.

உணவகங்கள் சொல்லும் விலையில் எங்களது தலையீடு இல்லை. எனினும் உங்களது பின்னூட்டத்தை நாங்கள் உணவகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம்" என பதிலளித்தது.

"உணவகங்கள் ஆன்லைன் ஆப்கள் மூலம் உணவு விற்பனை செய்யும் போது அதற்கான கமிஷனையும் கொடுக்க வேண்டியதனால் அதிக விலைக்கு விற்கின்றன" என்று ஒருவர் அதில் கமெண்ட் செய்திருந்தார்.

நம் வாழ்வு சுலபமாகும் போது அதற்கான செலவும் அதிகமகாகத் தானே செய்யும்?

Delivery
Swiggy : குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com