"நாங்கள் உயிருடன் இருக்கிறோம்" அரசாங்கத்துக்கு நிரூபிக்க போராடும் மக்கள் - என்ன நடந்தது?

ஒருவர், "நான் இப்போது உயிருடன் இல்லை என அரசாங்க பதிவுகள் கூறினால், என்னை யாராவது கொலை செய்தால் அவருக்கு தண்டனை கிடைக்குமா? உயிருடன் இல்லாதவரை யாராவது கொலை செய்ய முடியுமா?" எனக் கேட்கிறார்.
"நாங்கள் உயிருடன் இருக்கிறோம்" அரசாங்கத்துக்கு நிரூபிக்க போராடும் மக்கள் - என்ன நடந்தது?
"நாங்கள் உயிருடன் இருக்கிறோம்" அரசாங்கத்துக்கு நிரூபிக்க போராடும் மக்கள் - என்ன நடந்தது?Shivpuri District Collector
Published on

மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் சிலர் தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிக்கப் போராடி வருகின்றனர். அந்த நபர்கள் இறந்துவிட்டதாக அரசாங்க பதிவேடுகள் கூறுகின்றன.

ஷிவ்புரி மாவட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரி உம்ராவ் சிங் மாராவி இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். ஆவணப்படி இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய மற்றும் கருணைத் தொகைக்கு என 94 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பணம் ஷிவ்புரி மாவட்டம் மற்றும் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஊழலில் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாத, ஏழ்மையில் வாடும் மக்களாகவே உள்ளனர். இதனால் தான் இவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

இவர்களில் பலரும் சிறு, குறு விவசாயிகள். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியில் ஆண்டுதோறும் 6000 வாங்கும் விவசாயிகளுக்கு 2 வருடம் நிதி வருவது நின்ற பிறகுதான் அரசாங்க விவரங்களின் படி தாங்கள் இறந்துவிட்டதே தெரிந்துள்ளது.

அதிகாரிகள் இந்த மக்கள் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் கேட்டுள்ளனர். முழு உருவமாக அவர்கள் முன்னர் நிற்பதை விட வேறெந்த ஆதாரத்தை அந்த மக்களால் காட்டிவிட முடியும்.

நாங்கள் உயிருடன் இருப்பதாக அறிவிக்கவும், இறப்பு சான்றிதழை ரத்து செய்யவும் இந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இவர்களுக்கு பதில் கொடுக்கப்படவில்லை என பிபிசி செய்தியில் கூறியுள்ளானர்.

பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடன் வாங்க செல்லும் போதுதான் ஒருவருக்கு அவர் இறந்திருப்பதாக அரசாங்க பதிவுகள் கூறுவது தெரிய வந்துள்ளது.

ஒரு இளம் தம்பதி இறந்துவிட்டதாக அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அவர்களுக்கு குழந்தை பிறந்து, பிரவத்திற்கான அரசாங்க பணம் வராதபோது தான் அவர்கள் இந்த பிரச்னையை கண்டறிந்தனர்.

ஷிவ்புரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
ஷிவ்புரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இப்படி அந்த மாவட்டத்தில் மட்டும் 26 பேர் இறந்துவிட்டதாக போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மத்தியப் பிரதேச அரசின் 'சம்பல்' மற்றும் 'மத்தியப் பிரதேச கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்' என்ற திட்டங்களில் பதிவு செய்யப்படவர்கள்.

இந்த தொழிலாளர்கள் இறக்கும்போது, இறுதிச் சடங்கு உதவியாக, ஆறாயிரம் ரூபாயும், சாதாரண மரணம் ஏற்பட்டால், இரண்டு லட்ச ரூபாயும், விபத்தில் இறந்தால், நான்கு லட்ச ரூபாயும், கருணைத் தொகையாக வழங்கப்படுகிறது.

"நாங்கள் உயிருடன் இருக்கிறோம்" அரசாங்கத்துக்கு நிரூபிக்க போராடும் மக்கள் - என்ன நடந்தது?
கேரளா: இந்தியாவின் அழகான கிராமத்தில் மக்கள் அவதி - பாலக்காட்டு சொர்க்கம் பரிதவிப்பது ஏன்?

இதனை வேறுகணக்கில் எடுப்பதற்காகவே இப்படி போலியான இறப்பு சான்றிதழ் உருவாக்கி பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு தலைமை அதிகாரிகள், இரண்டு எழுத்தாளர்கள் மற்றும் ஒரு ஆபரேட்டர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சொத்துகளில் இருந்தே பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேர வேண்டிய பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுபோல இன்னும் எத்தனை வழக்குகள் இருக்கின்றன என்றும் சோதிக்கின்றனர்.

"நாங்கள் உயிருடன் இருக்கிறோம்" அரசாங்கத்துக்கு நிரூபிக்க போராடும் மக்கள் - என்ன நடந்தது?
Moreh : மணிப்பூரில் ஒரு மெட்ராஸ் - தமிழ் மக்கள் வடகிழக்கு சென்றது எப்படி?

பாதிக்கப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களால் எந்த அரசு திட்டத்தையும் பயன்படுத்த முடியாமல் போகும்.

வெள்ளந்தியான அவர்களில் ஒருவர், "நான் இப்போது உயிருடன் இல்லை என அரசாங்க பதிவுகள் கூறினால், என்னை யாராவது கொலை செய்தால் அவருக்கு தண்டனை கிடைக்குமா? உயிருடன் இல்லாதவரை யாராவது கொலை செய்ய முடியுமா?" எனக் கேட்கிறார்.

"நாங்கள் உயிருடன் இருக்கிறோம்" அரசாங்கத்துக்கு நிரூபிக்க போராடும் மக்கள் - என்ன நடந்தது?
குர்து மக்கள் : தனி நாடு -  மத்திய கிழக்கில் போராடும் ஒரு தேசிய இனத்தின் விறுவிறு வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com