World Cup: தோல்விக்கு பிறகு வீரர்களை தேற்றிய மோடி - விராட், ரோஹித்திடம் கூறியது என்ன?

இந்திய அணியின் மற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தவர், முகமது ஷமியை கட்டியணைத்து பாராட்டுக்களை கூறினார். அனைவரும், சிறப்பாக உழைத்து திறனை வெளிபடுத்தி விளையாடியதாக கூறிய மோடி, அணி வீரர்களை தேற்றினார்.
World Cup: தோல்விக்கு பிறகு இந்திய வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி - வெளியான வீடியோ வைரல்!
World Cup: தோல்விக்கு பிறகு இந்திய வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி - வெளியான வீடியோ வைரல்!Twitter

உலகக்கோப்பை பைனலில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.

போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்களை நேரில் சென்று சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

கடந்த நவம்பர் 19ஆம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் உலகக்கோப்பை பைனல் நடந்தது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதனத்தில் நடந்த இந்த போட்டியில், இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதனால், மைதானத்தில் இருந்து கண்ணீர் மல்க, இந்திய அணி வீரர்கள் வெளியேறினர்.

இதனையடுத்து போட்டியை காண மைதானத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷா, இந்திய அணி வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் நேரில் சென்று சந்தித்தனர்.

World Cup: தோல்விக்கு பிறகு இந்திய வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி - வெளியான வீடியோ வைரல்!
Ind vs Aus: ஆறாவது கோப்பையை கைப்பற்றிய ஆஸி; கண்கலங்கிய இந்திய அணி - என்ன நடந்தது?

அப்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் பேசியவர், “மகிழ்ச்சியாக இருங்கள், 10 போட்டிகளில் வென்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். தோல்விகள் சகஜம். சிரியுங்கள், இந்த நாடு உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறது” என்று ஆறுதல் கூறினார்.

இந்திய அணியின் மற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தவர், முகமது ஷமியை கட்டியணைத்து பாராட்டுக்களை கூறினார். அனைவரும், சிறப்பாக உழைத்து திறனை வெளிபடுத்தி விளையாடியதாக கூறிய மோடி, அணி வீரர்களை தேற்றினார்.

மேலும் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருங்கள் என்று தெரிவித்தவர், டெல்லி வந்ததும் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என்றும் கூறினார்.

World Cup: தோல்விக்கு பிறகு இந்திய வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி - வெளியான வீடியோ வைரல்!
நரேந்திர மோடி: இந்திய பிரதமருடன் பானி பூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர் | Viral Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com