குடியரசு தின விழாவில் கவனம் ஈர்த்த பிரதமர் மோடியின் தலைப்பாகை - என்ன சிறப்பு?

குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி பல வண்ணங்களில் ஆன ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்திருந்தது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
PM Modi wears multi-coloured Rajasthani turban, President chooses Odisha silk
PM Modi wears multi-coloured Rajasthani turban, President chooses Odisha silkTwitter
Published on

74வது குடியரசு தினத்தையொட்டி, இந்தியாவின் பன்முகத்தன்மையை குறிக்கும் வகையில் பல வண்ண ராஜஸ்தானி தலைப்பாகையை பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்தார்.

குடியரசு தின அணிவகுப்புக்கு முன்னதாக பிரதமர் மோடி தேசிய போர் நினைவிடத்திற்கு வந்தபோது இந்த உடையின் முதல் பார்வை வெளிப்பட்டது.

வெள்ளை குர்தா மற்றும் கால்சட்டையுடன் கருப்பு கோட் அணிந்திருந்த பிரதமர் மோடி, வெள்ளை நிற ஸ்டோலை அணிந்திருந்தார்.

பிரதமர் மோடி முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது விதவிதமான தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்தாண்டு குடியரசு தின விழாவில், பல வண்ணங்களில் ஆன ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார்.

குடியரசு தின விழா நிறைவடைந்த பிறகு கார் கதவை திறந்து கொண்டு நின்றபடி பார்வையாளர்களை நோக்கி இரு கைகளையும் அசைவத்தவாறே சென்றார்.

PM Modi wears multi-coloured Rajasthani turban, President chooses Odisha silk
இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது? - பாரம்பரியங்கள் தோன்றியது எப்படி?

கடந்த ஆண்டு, பிரதமர் மோடியின் உடையில் உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரின் தனித்துவமான தலைப்பாகை இருந்தது.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியின் உடைகள் மிகவும் தனித்துவமாக அமைந்து இருக்கின்றன.

கடந்த 9 ஆண்டுகளாக இவ்வாறு தனித்துவமான உடைகளையே தேர்வு செய்து அணிந்து அசத்தி வருகிறார்.

PM Modi wears multi-coloured Rajasthani turban, President chooses Odisha silk
PM Modi : BBC ஆவணப்படத்தை திரையிட JNU மாணவர்கள் முயற்சி - மின்தடை, கல்வீச்சால் பரபரப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com