நீட் தேர்வு : உள்ளாடைகளை அகற்ற கூறினார்களா? உண்மை என்ன?

“ இது அக்கிரமத்தின் உச்சம். தேர்வு என்பது இதுதானா? மாணவ மாணவிகளுக்கு மன உளைச்சல் தர மட்டும்தான் இந்த தேர்வு நடத்தப்படுகிறதா?. இப்படியெல்லாம் செய்த பின் எப்படி மகளால் நன்கு தேர்வு எழுதி இருக்க முடியும்,”
Neet
NeetPexels
Published on

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நீட் எழுத சென்ற மாணவிகளை உள்ளாடைகளை அகற்றுமாறு சொன்ன சமபவம் இந்திய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.


என்ன நடந்தது?

பெற்றோர் ஒருவர் காவல்துறையில் புகார் கூறியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த மாணவியின் தந்தை சூராநத், “ இது அக்கிரமத்தின் உச்சம். தேர்வு என்பது இதுதானா? மாணவ மாணவிகளுக்கு மன உளைச்சல் தர மட்டும்தான் இந்த தேர்வு நடத்தப்படுகிறதா?. இப்படியெல்லாம் செய்த பின் எப்படி மகளால் நன்கு தேர்வு எழுதி இருக்க முடியும்,” எனக் கூறி உள்ளார்.

இதனைத் தாம் காவல்துறையில் புகாராக அளித்து உள்ளதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்து உள்ளார்.

புகாரில் உள்ளது என்ன?

தேர்வுக்குச் சென்ற என் மகளிடம் உள்ளாடையை அகற்றக் கூறி இருக்கிறார்கள். ஆனால், தேவு விதிமுறைகளில் இவ்வாறாகலெல்லாம் இல்லை.

“தேசிய சோதனை முகமையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில் எனது மகளிடம் உள்ளாடையைக் கழற்ற கோரியுள்ளனர். அவள் அதற்கு மறுத்தபோது, பரீட்சை எழுத அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்” என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

என் மகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு என்பது முக்கிய நுழைவுத் தேர்வாக இருக்கிறது. அப்படியிருக்க இம்மாதிரியான கடுமையான நடத்தைகளின் மூலம் மாணவர்கள் மன ரீதியாகத் துன்புறுத்தப்படுகின்றனர். பலர் தங்கள் உள்ளாடைகளில் உள்ள ஊக்குகளை அகற்றி அதைக் கட்டிக் கொண்டனர்,” என அந்த புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Neet
இலங்கை பொருளாதார நெருக்கடி : இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

காவல்துறை கூறுவது என்ன?

இது குறித்து பேசிய கொல்லம் காவல்துறை அதிகாரிகள், “நாங்கள் மாணவியின் கூற்றைப் பதிவு செய்து கொண்டோம். சிறிது நேரத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வோம்,” என்கின்றனர்.

Neet
ரஷ்யா நாட்டில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் செளதி - இதுதான் காரணம்

மத்திய அரசிற்குக் கடிதம்:

இது குறித்து தேசிய சோதனை முகமைக்கும் கடிதம் எழுதவிருப்பதாகக் கேரளாவின் சமூக நலத்துறை அமைச்சர் ஆர். பிந்து தெரிவித்துள்ளார்.

“இது ஒரு அவமரியாதை செயல். எப்படி எங்கள் மாணவிகளிடம் இப்படி நடந்து கொள்ள முடியும்? இம்மாதிரியான செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.

இது முதல்முறை அல்ல

நீட் தேர்வின் போது நடத்தப்படும் சோதனைகள் சர்ச்சையாவது இது முதல் முறையல்ல. 2017ஆம் ஆண்டு கண்ணூரில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றதாக மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் கருப்பு கால்சட்டை அணிந்திருந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் பல மாநிலங்களில் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளதாகப் பதிவுகள் உள்ளன.

இது குறித்து விகடனில் வெளியான கட்டுரையைப் படிக்க

தேசிய தேர்வு முகமையின் மறுப்பு

தேசிய தேர்வு முகமை இந்த புகார் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளது.

தேர்வு நடைபெற்ற மையத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர், நகர ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மாணவி தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வு சமயத்திலோ அல்லது அது முடிந்த பிறகோ இது மாதிரியான எந்த புகாரும் வரவில்லை. தேசிய தேர்வு முகமைக்கும் இதுபோன்ற எந்த மின்னஞ்சலோ அல்லது புகாரோ வரவில்லை.

மாணவியின் பெற்றோர் கூறுவது போன்ற எந்த நடவடிக்கையும் நீட் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

Neet
செளதி அரேபியா கதை - 1 : அடர் வனம் பாலைவனம் ஆக மாறிய வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com