உலகில் கச்சா எண்ணெய்யை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் செளதி அரேபியாவும் ஒன்று. இருப்பினும் தன் சொந்த தேவைகள் மற்றும் சில பல காரணங்களை முன்னிட்டு செளதி அரேபியா மற்ற நாடுகளிடமிருந்தும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக, ரஷ்ய நாட்டோடு எவரும் பொருளாதார ரீதியில் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது அல்லது அவர்களுடன் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என மேற்கத்திய நாடுகள் தடை விதித்திருக்கின்றன.
ஆனால் செளதி அரேபியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருவதைத் தாண்டி, சமீபத்தில் ரஷ்ய இறக்குமதி இரு மடங்கு அதிகரித்துள்ளதாக ராய்டர்ஸ் முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) செளதி அரேபியா, ரஷ்யாவிடமிருந்து 6.47 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. கடந்த 2021 இரண்டாவது காலாண்டில் 3.2 லட்சம் டன் இறக்குமதி செய்திருந்ததோடு ஒப்பிடும் போது இது 100 சதவீதம் அதிகம். Refinitiv Eikon என்கிற கப்பல்களைக் கண்காணிக்கும் தளத்திலிருந்து இத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 2022-ல், செளதி அரேபியா எகிப்து நாட்டின் வழி தினமும் 1.1 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்கியது. எகிப்து நாடும் ரஷ்யாவிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 70,000 பேரல் கச்சா எண்ணெய்யை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
செளதி அரேபியா, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது ஏன்?
ஒரே காரணம் விலை.
செளதி அரேபியாவில் கோடைக் காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கும். மின்சார உற்பத்தியை அதிகரிக்க, மலிவு விலைக்குக் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய்யை செளதி பயன்படுத்துகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினோ, தன் மலிவு விலை கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் பயன்படுத்தி உக்ரைனுக்கு எதிரான போரை நடத்தி வருகிறார்.
செளதி அரேபியா தவிர, இந்தியா, சீனா போன்ற நாடுகளும் ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் பணவீக்கப் பிரச்சனை வேறு எளிதில் கட்டுக்குள் கொண்டுவர முடியாத அளவுக்குத் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வேறு சமீபத்தில் 80 ரூபாயைத் தொட்டது. இந்த பிரச்சனைகளை எல்லாம் ஓரளவுக்காவது சமாளிக்கும் விதத்தில் தான் இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செளதி அரேபியா உடனான ராஜ்ஜிய உறவை மேம்படுத்த, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த, உலக சந்தையில் கச்சா எண்ணெய் வரத்தை அதிகரிப்பது தொடர்பாகப் பேச ரியாத் நகரத்துக்குச் சென்றுள்ளார். இந்த நேரம் பார்த்து ரஷ்ய இறக்குமதி தொடர்பான விவரங்கள் விவாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில், செளதி அரேபியாவுக்கு எதிரான மனநிலையில் அமெரிக்கா இருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust