Prahlad Jani : "நான் உயிர்வாழ உணவு, தண்ணீர் தேவையில்லை" - அறிவியல் உலகை அதிரவைத்த மனிதர்

இவர் மீதான சோதனை மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. உயிருடன் இருக்கலாம், ஆனால் ஆரோக்கியமாக இருப்பது எப்படி சாத்தியமானது? அவரது ஆரோக்கியத்துக்கான காரணமாக அவர் கூறியது யாரும் நம்பமுடியாமல் இருந்தது.
Prahlad Jani : "நான் உயிர்வாழ உணவு, தண்ணீர் தேவையில்லை" - அறிவியல் உலகை அதிரவைத்த மனிதர்
Prahlad Jani : "நான் உயிர்வாழ உணவு, தண்ணீர் தேவையில்லை" - அறிவியல் உலகை அதிரவைத்த மனிதர்Twitter
Published on

இமய மலையும், காடுகளும், எண்ணிலடங்கா ஆறுகளும், விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும், மூலிகைகளும், தாஜ்மஹாலும் மட்டும் இந்தியாவின் அதிசயங்கள் அல்ல.

இந்த நாடு அதிசய மனிதர்களாலும் சூழப்பட்டுள்ளது. புத்தர் முதல் வள்ளலார் வரை பல மஹான்களும் சித்தர்களும் வாழ்ந்த இந்தியாவைச் சேர்ந்த ஒரு யோகி தன்னால் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் கூட வாழ முடியும் என்றார்.

தனது 73 வயதுதில் நான் வாழ்வில் சாப்பிட்டதே இல்லை எனக் கூறிய அவர் மீது எல்லோருக்கும் தொடக்கத்தில் சந்தேகம் தான் எழுந்தது.

அவர்மீது அறிவியலாளர்கள் சோதனை நிகழ்த்தினார்கள் அதில் வியக்கத்தக்க விதமாக அவரது கூற்று உறுதியானது.

அவர் பெயர் பிரஹலாத் ஜானி. சிலர் இவரைக் கடவுளாக நினைக்கின்றனர். சிலர் இவர் மோசடி செய்பவர் என்றனர்.

“நவராத்திரியின் 8வது நாளின் நள்ளிரவில், 3 தேவிகள் (காளி, லட்சுமி மற்றும் சரஸ்வதி) எனக்கு தோன்றினார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் என் உதடுகளில் ஒரு விரலை வைத்து சொன்னார்கள்: "நீங்கள் இனி உணவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை." அப்போது எனக்கு பதினான்கு வயது, அன்று முதல் நான் சாப்பிடுவதையும் குடிப்பதையும் நிறுத்தினேன். - யோகி பிரஹலாத் ஜானி.

யோகி பிரஹலாத் ஜானியின் கதை என்ன?

சுன்ரிவாலே மாதாஜி என்று பக்தர்களால் அழைக்கப்படும் பிரஹலாத் ஜானி, தனது 7 வயதில் வீட்டில் இருந்து வெளியேறி, காட்டில் வாழத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

11 வயதில் அம்பாளின் பக்தரான இவர், பெண் போலத் தோற்றம் கொள்ளத் தொடங்கினார். சிகப்பு சேலை, வலையள், மூக்குத்தி உள்ளிட்ட நகைகள், தலையில் சிகப்பு குங்குமம், நீளமான முடி ஆகியன பிரஹலாத் ஜானியின் அடையாளங்களாகின. மக்களும் இவரை மாதாஜி என்று அழைக்கத் தொடங்கினர்.

1970ம் ஆண்டு முதல் குஜராத்தில் உள்ள மலைக்காட்டு குகை ஒன்றில் துறவியாக வாழத் தொடங்கினார்.

பிரஹலாத் ஜானி, தினமும் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாராம். ஒவ்வொரு நாளிலும் பெரும் பகுதியை தியானம் செய்து தான் கழிப்பாராம்.

இவரது மொத்த வாழ்வுமே விவாதங்களுக்கு உட்படவேண்டியது தான். இவர் தான் உண்பதே இல்லை எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து 2003ம் ஆண்டு இவர் மீது சோதனை நடத்தினர்.

முதல் சோதனை

அகமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனையில் மருத்துவர் சுதிர் மற்றும் சில மருத்துவர்கள் இணைந்து பிரஹலாத் ஜானியைக் கண்காணித்தனர்.

10 நாட்கள் இவரைப் பூட்டப்பட்ட அறையில் வைத்திருக்கின்றனர். அவருக்கு உணவோ தண்ணீரோ கொடுக்கப்படவில்லை. ஆனாலும் இறுதிவரையில் அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளார்.

இது மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. உயிருடன் இருக்கலாம், ஆனால் ஆரோக்கியமாக இருப்பது எப்படி சாத்தியமானது? அவரது ஆரோக்கியத்துக்கான காரணமாக அவர் கூறியது யாரும் நம்பமுடியாமல் இருந்தது.

Prahlad Jani : "நான் உயிர்வாழ உணவு, தண்ணீர் தேவையில்லை" - அறிவியல் உலகை அதிரவைத்த மனிதர்
The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை!

அண்ணத்தில் துவாரம் இருந்ததா?

பிரஹலாத் ஜானி தனது அண்ணத்தில் (நாக்குக்கு மேற்பகுதி) அம்பாள் துளையிட்டு தனக்குத் தேவையானவற்றை அளிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அப்படி ஒரு துளை அவரது வாயில் இருந்தாக மருத்துவர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த சோதனைக்கு பிறகு மக்களால் மட்டுமல்லாமல் மருத்துவர்களாலும் பேசப்பட்டார் பிரஹலாத் ஜானி.

இரண்டாவது சோதனை

அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் இவரை சோதித்தனர்.

இவரது வித்தியாசமான நடவடிக்கைக்கு பின்னால் அறிவியல் காரணம் ஏதேனும் இருந்தால் அதனை பயன்படுத்தி இராணுவ வீரர்களையும் உணவில்லாமல் தாக்குபிடிக்க வைக்கலாம், அல்லது ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம் என்பது அவர்களின் எண்ணம்.

இந்த முறை இரண்டு வாரத்துக்கும் மேலாக 15 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார் பிரஹலாத் ஜானி.

கேமரா முன் அமர்த்தப்பட்டார் ஜானி. அவரது உடல் உள்ளுறுப்புகளை ஸ்கேன் செய்தனர்.

மூளை, இரத்த நாளங்கள், இதயம், நுரையீரல் மற்றும் நினைவக திறன் ஆகியவற்றை மருத்துவர்காள் சோதித்தனர்.

மருத்துவர்கள் இந்த ஆய்வு முடிவில், "அவர் 15 நாட்களாக சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ, கழிப்பறை உபயோகிக்கவோ இல்லை. குளிக்கும் போதும், வாய்கொப்பளிக்கும் போதும் மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளார்" என மருத்துவர்கள் குழு கூறியது.

Prahlad Jani : "நான் உயிர்வாழ உணவு, தண்ணீர் தேவையில்லை" - அறிவியல் உலகை அதிரவைத்த மனிதர்
”ஊரில் யார் இறந்தாலும் ஒரே ஒரு மாலைதான் போடுவோம்”- வினோத கட்டுப்பாடு விதித்த கிராமம்- ஏன்?

சர்வதேச வெளிச்சம்

2006ம் ஆண்டு டிஸ்கவரி சேனல், "The Boy with Divine Powers" என்ற ஆவணப்படத்தில் பிரஹலாத் ஜானி குறித்து 5 நிமிடம் பதிவு செய்திருக்கிறது.

”தொடக்கத்தில் அங்கு ஒளி மட்டுமே இருந்தது” என்று பொருள்படும் "AM Anfang war das Licht" என்ற ஆஸ்திரேலிய ஆவணப்படத்திலும் பிரஹலாத் ஜானி குறித்த பதிவுகள் உள்ளன.  

பிரஹலாத் ஜானி எப்படி உணவே இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார். நிச்சயமாக அவர் நம் கற்பனைக்கு எட்டாத மனத்துடன் இருக்கிறார். அவரது மனது ஒரு 25 வயது இளைஞனுடையதைப் போன்றது என அறிஞர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது உடல், நிச்சயமாக அது ஒரு அதிசயம் தான்!

கடந்த 2020ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக தனது 90 வயதில் உயிரிழந்தார் ஜானி. நாம் துளைத்துப் பார்க்காத பல அதிசயங்கள் இந்த உலகில் இருக்கின்றன என்பதை பிரஹலாத் ஜானி மூலம் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம்.

Prahlad Jani : "நான் உயிர்வாழ உணவு, தண்ணீர் தேவையில்லை" - அறிவியல் உலகை அதிரவைத்த மனிதர்
பத்து வருடங்களாக ஒரு கையை தூக்கியப்படியே வாழும் சாமியார் - கூறும் விநோத காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com