மோடி : நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சுக்கு பிரதமர் பதிலடி

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது என ராகுல்காந்தி கூறியதற்குப் பதிலடி தரும் வகையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைப்பதை மக்கள் விரும்பவில்லை. அதனால் தான் 1962 க்கு பிறகு காங்கிரஸால் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியவில்லை" எனப் பேசினார்
மோடி மற்றும் ராகுல்

மோடி மற்றும் ராகுல்

Twitter

Published on

பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசினார். மறைந்த பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தி உரையைத் தொடங்கிய அவர், அதில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் விமரிசங்களுக்குப் பதிலளித்துப் பேசியுள்ளார்.

“ இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் முற்றிலும் மாறியது. அது போல, கொரோனாவுக்கு பிறகு பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகான காலகட்டத்தில் மற்ற நாடுகளுக்குத் தலைமை தாங்கும் இடத்தில் இந்தியா இருக்க வேண்டும். இன்று இந்தியாவில் இருக்கும் ஏழைகளும் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கின்றனர், வீடு, கழிவறைகள் இருக்கின்றன. வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். அரசின் திட்டங்களின் மூலம் ஏழைகளும் லட்சாதிபதிகளாக இருக்கின்றனர்” எனப் பேசியிருக்கிறார்.

<div class="paragraphs"><p>மோடி மற்றும் ராகுல்</p></div>
பாலியல் சுற்றுலா : ஏழை நாடுகளைச் சுரண்டும் மேற்குலக நாடுகள்!
<div class="paragraphs"><p>Narendramodi</p></div>

Narendramodi

Newssense

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது என ராகுல்காந்தி கூறியதற்குப் பதிலடி தரும் வகையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைப்பதை மக்கள் விரும்பவில்லை. அதனால் தான் 1962 க்கு பிறகு காங்கிரஸால் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியவில்லை. மேலும் பல மாநிலங்கள் காங்கிரஸ் ஆட்சி செய்வதை விரும்புவதில்லை” எனவும் கூறினார்.

“கொரோனா முதல் அலையின் போது காங்கிரஸ் கட்சி மும்பையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் டிக்கெட் வழங்கியது. ஆனால் உத்திர பிரதேசம் மற்றும் உத்திரகண்டில் நோய்தொரற்று அதிகரித்தது” என மோடி குற்றம்சாட்டினார். மேலும், “காங்கிரஸ் பேசும் விதமும் அவர்கள் பேசும் பிரச்சனைகளும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அவர்கள் ஆட்சியமைக்க முடியாதபடி இருக்கின்றது” என்றும் பேசியிருக்கிறார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com