பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : "ஊழலும், வாரிசு அரசியலும் தேசத்தை அரிக்கும் கறையான்"

"அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 2047க்குள் சுதந்திர போராட்ட வீரர்கள் கனவுகளை நனவாக்க வேண்டும்'' என்றார் பிரதமர்.
modi
modiTwitter
Published on

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ஊழலும் வாரிசு அரசியலும் நாட்டின் இரு பெரும் பிரச்னையாக இருப்பதாக பேசியிருக்கிறார்.

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி செங்கோட்டை சென்றார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமரை செங்கோட்டைக்குள் வரவேற்றார். முப்படையினர் மரியாதையுடன் மேடைக்கு சென்ற பிரதமர் மோடி, 7:30 மணிக்கு கொடி ஏற்றினார். பின்னர் தேசிய கீதம் ஒலிக்க மரியாதை செலுத்தினர். ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவி கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இராணுவ வீரர்களின் அணிவகுப்பு முடிந்ததும் மோடி நாட்டுமக்களுக்காக உரையாற்றினார்.

தியாகிகளை நினைவுகூறுவோம்

"நம் நாட்டின் விடுதலைக்கான போராட்டம் நடந்தபோது ஒரே ஒரு நாள் கூட விடுதலைப் போராட்ட வீரர்கள் கொடுமைகளை அனுபவிக்காமல் இல்லை. இன்று நாம் அவர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்த வேண்டிய நாள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தொலைநோக்குப் பார்வையை தேசத்தைப் பற்றிய அவர்களின் கனவை நாம் இன்று நினைவுகூர வேண்டும்.

நமது தேசியக் கொடியின் பெருமை நமது தேசத்தைத் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒளிர்கிறது. விடுதலைப் போரில் ஈடுபட்ட ராணி லக்ஷ்மி பாய், ஹஸ்ரத் மஹல், வேலு நாச்சியாரை நினைவு கூறுவோம்." என்று பிரதமர் பேசினார்.

ஊழலும்... வாரிசு அரசியலும்...

"ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்கள். ஊழல் தேசத்தை அரிக்கும் கறையான். ஊழலை ஒழிக்காமல் ஊழல்வாதிகளை தண்டிக்கும் மனநிலையை மக்கள் வளர்த்துக் கொள்ளாதவரை தேசம் அதன் முழுவேகத்தில் முன்னேற இயலாது. இந்த வேளையில் நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு சவால் வேண்டியவர்களுக்கு செய்யப்படும் சலுகை. குடும்பத்தினர், உறவினர்கள், வேண்டியவர்கள் என்று காட்டப்படும் சலுகைகளும், செய்யப்படும் சிபாரிசுகளும் பெரிய தீமை. இது உண்மையான திறமைசாலிகளின் வாய்ப்பைப் பறித்துவிடும். தகுதியும், திறமையும் கொண்டவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் நமது தேசம் வளர்ச்சி காணும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

modi
75வது சுதந்திர தினம் : இந்தியாவுடன் சுதந்திர தினத்தை பகிர்ந்து கொள்ளும் நாடுகள்

2047க்குள் கனவுகளை நனவாக்க வேண்டும்

"போராட்டத்தில் பங்கெடுத்தும் வெளியே தெரியாமல் புறக்கணிக்கப்பட்ட அனைவரையும் நாம் நினைவு கூறுவோம். நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது மக்கள் கடும் இன்னல்களை சகித்துக் கொண்டனர். சுதந்திரம் பெற்றுள்ள இந்த 75 ஆண்டுகளில் நாடு பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறது. ஆனால் ஆருடம் அத்தனையையும் தகர்த்து தேசிய கொடி பறக்கிறது. உலகில் ஜனநாயகம் பிறந்தது இந்தியாவில் தான் என்பதை நாம் உலகிற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். பஞ்சம், போர், பயங்கரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்தியா ஜனநாயக பாதையில் முன்னேறுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது.

இந்தியாவின் பன்முக தன்மையே அதன் வலிமையாகும். நம் நாடு ஜனநாயகத்தின் வீடு. ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றி மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த ஒருங்கிணைந்த உணர்வு தான் இந்தியாவின் பலம். புதிய இந்தியாவிற்கு அதுதான் அடிப்படை. நிலையான அரசு, சிறப்பான கொள்கை மூலம் விரைவான வளர்ச்சி என உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளோம். அனைவருக்கும் நல்லாட்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 2047க்குள் சுதந்திர போராட்ட வீரர்கள் கனவுகளை நனவாக்க வேண்டும்'' என்றார் பிரதமர்.

modi
75வது சுதந்திர தினவிழா : இந்தியாவின் தேசிய சின்னங்கள் இவை தான் !

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com