75வது சுதந்திர தினம் : இந்தியாவுடன் சுதந்திர தினத்தை பகிர்ந்து கொள்ளும் நாடுகள்

மனிதருக்கு மனிதர் அடிமையாக இருப்பதை விட கொடியது எதுவுமில்லை. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நம் நாடு விடுதலை அடைந்த நாள் ஆகஸ்ட் 15. இந்தியா தவிர மற்ற சில நாடுகளுக்கும் இந்த நாளை சுதந்திர தினமாக கடைபிடிக்கின்றன. அந்த மற்ற நாடுகளைக் காணலாம்.
India
IndiaTwitter
Published on

நாளை நாடு முழுவதும் 75வது சுதந்தர தினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறோம். நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய போராட்டக்காரர்களையும் அவர்களது தியாகத்தையும் விடுதலை வேட்கையையும் போற்றும் வகையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

200 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்பட்டு கிடந்த நம் நாட்டின் விடுதலைக்காக ஆயிரக்கணக்கான தியாகிகள் இரத்தம் சிந்தியிருக்கின்றனர்.

மனிதருக்கு மனிதர் அடிமையாக இருப்பதை விட கொடியது எதுவுமில்லை. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நம் நாடு விடுதலை அடைந்த நாள் ஆகஸ்ட் 15.

இந்தியா தவிர மற்ற சில நாடுகளும் இந்த நாளை சுதந்திர தினமாக கடைபிடிக்கின்றன. அந்த மற்ற நாடுகளைப் பற்றிக் காணலாம்.

பஹ்ரைன்

ஐ.நா சபையின் பஹ்ரைன் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் 1971ம் ஆண்டு பிரிட்டிஷிடம் இருந்து விடுதலை பெற்றது பஹ்ரைன்.

பஹ்ரைன் பிரிட்டிஷில் இருந்து விடுதலை பெற்றது ஆகஸ்ட் 15 என்றாலும் அந்த நாட்டில் பொது விடுமுறையுடன் National Day -வாக கொண்டாடப்படுவது டிசம்பர் 16ம் தேதிதான்.

மறைந்த ஆட்சியாளர் இசா பின் சல்மான் அல் கலீஃபா ஆட்சியில் அமர்ந்த நாளை கொண்டாடுகின்றனர்.

வடகொரியா மற்றும் தென் கொரியா

வடகொரியா மற்றும் தென் கொரியா நாடுகள் இணைந்து கொரிய தீபகற்பமாக விளங்கிய போது அமெரிக்கா மற்றும் ரஷ்ய படைகள் இணைந்து ஜப்பானின் ஆதிக்கத்தை கொரிய மண்ணிலிருந்து துரத்தியடிக்க இந்த விடுதலை சாத்தியமானது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் விடுதலை பெற்ற கொரியா 1948 ஆகஸ்ட் 15 வட மற்றும் தென் கொரிய நாடுகளாக பிரிந்தது. இதனால் இந்த இரு நாடுகளுக்கு இந்த நாள் விடுமுறை தினமாக இருக்கிறது.

India
வட கொரியா : கிம் வம்சத்தின் வரலாறு | Part 1

காங்கோ

பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த ஆப்ரிக்க நாடான காங்கோ ஆகஸ்ட் 15 1960ல் விடுதலை அடைந்தது. Congolese National Day என்றும் இந்த தினம் அழைக்கப்படுகிறது.

India
ஆப்ரிக்காவின் சேகுவேரா: சதியால் கொல்லப்பட்ட தலைவர் இளைஞர்களின் ஹீரோவான வரலாறு

லிச்சென்ஸ்டீன்

லிச்சென்ஸ்டீன்
லிச்சென்ஸ்டீன்Twitter

உலகின் மிக சிறிய நாடுகளில் ஒன்றான லிச்சென்ஸ்டீன் ஜெர்மனியிடமிருந்து 1940 ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை பெற்றது. லிச்சென்ஸ்டீன் 1866 முதல் ஜெர்மனியின் பிடியிலிருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

India
லிச்சென்ஸ்டீன் எனும் பூலோக சொர்க்கம் - ஆஹா இப்படியும் ஒரு நாடா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com