குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனையும், காவல்துறையினரின் நடவடிக்கையும் தான் சமூகத்தில் குற்றங்கள் குறைய முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றத்துக்கு வருந்தாமல், மகிழ்ச்சியாக இருந்தால், குற்றங்கள் எப்படிக் குறையும்?
குற்றம் புரிவதற்கு முன்னர் எவரையும் ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்க வைக்கத் தானே சட்டமும் காவல்துறையும்?
மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பதிவாகியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் குற்றவாளி ஒருவர் காவல்துறை வாகனத்துக்கு உள்ளே இருந்த படி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான கேக்கை வெட்டுகிறார்.
அந்த குற்றவாளியின் பெயர் ரோஷன் ஜா என்று கூறப்படுகிறது. அவர் போலீஸ் வாகனத்துக்கு உள்ளே இருக்கும் போது கூட்டாளிகள் அவரிடம் கேக்கை நீட்ட, அவர் அதை வெட்டுகிறார்.
இந்த சம்பவம் நீதிமன்றத்துக்கு அருகில் நடந்திருக்கிறது.
இந்த வீடியோ குற்றவாளியின் நண்பர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வழியாக பரவியுள்ளது.
தானே ரூரல் போலீஸ் குற்றவாளியை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது என்றும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் காவலர்கள் கூறியுள்ளனர்.
ஊடகங்கள் கூறுவதுப் படி, இந்த ரோஷன் ஜா ஒரு கொலைக் குற்றவாளி மற்றும் இவர் மீது கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளும் இருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust