கத்தார்: 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை - வெளியுறவுத்துறை சொல்வதென்ன?
கத்தார்: 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை - வெளியுறவுத்துறை சொல்வதென்ன?Twitter

கத்தார்: 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை - வெளியுறவுத்துறை சொல்வதென்ன?

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக இந்த அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் மிகவும் சென்சிடிவான திட்டங்களில் பணியாற்றியுள்ளனர்.

இந்தியாவின் எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு கத்தாரில் மரணதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. இது அதிர்ச்சியளிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது.

இந்த செய்தி வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே இந்திய வெளியுறவுத் துறை இதில் கூடுதல் கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக இந்த அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தண்டனைப் பெற்றுள்ள அதிகாரிகளில் ஒருவர் இந்தியாவின் பெரிய போர்களுக்கு உத்தரவுகளை வழங்கும் பொறுப்பில் இருந்துளார். இவர்கள் கத்தாரின் ஆயுதப்படை பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளனர்.

அவர்கள் மிகவும் முக்கியமான (சென்சிடிவான) திட்டங்களில் பணியாற்றியிருக்கின்றனர். அது இத்தாலிய தொழில்நுட்பம் அடிப்படையிலான ரகசிய நீர்மூழ்கி பற்றிய திட்டம் என்றுக் கூறப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த அதிகாரிகள் கத்தாரில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்தியா அவர்களை விடுப்விப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இவர்கள் பலமுறை பெயில் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இந்நிலையில் இவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கத்தார்: 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை - வெளியுறவுத்துறை சொல்வதென்ன?
பென்குயினுக்கு உயர் பதவி வழங்கிய நார்வே இராணுவம் - பின்னணி என்ன?

தண்டனைப் பெறும் அதிகாரிகள், கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், சிடிஆர் அமித் நாக்பால், சிடிஆர் பூர்ணேந்து திவாரி, சிடிஆர் சுகுணாகர் பகாலா, சிடிஆர் சஞ்சீவ் குப்தா மற்றும் ராகேஷ்.

மேலும் இந்திய வெளியுறவுத் துறை, தீர்ப்பின் விவரங்களுக்காக காத்திருப்பதாகவும் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும் சட்டரீதியில் அவர்களை விடுவிக்க முயற்சி எடுப்பதாகவும் கூறியுள்ளது.

கத்தார்: 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை - வெளியுறவுத்துறை சொல்வதென்ன?
Qatar : பாலைவனம் டூ 'பணக்கார நாடு' - கத்தார் வளர்ச்சியின் 3 ரகசியங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com