திருமண உறவில் ஈடுபட்டு குழந்தை பெறுவதற்கு பரோல் வழங்கி ராஜஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

எந்த வெளிப்படையான விதிகளும் இல்லாத நிலையிலும் பல சமூக விஷயங்களைக் கருத்தில் கொண்டு மனைவியுடன் திருமண உறவில் ஈடுபட்ட குழந்தை பெற்றுக்கொள்ள ஆயுள் தண்டனை கைதி நந்த லாலுவுக்கு 15 நாட்கள் அவசர பரோல் வழங்கி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Judgement
JudgementNews Sense

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த கொலைக் குற்றவாளிக்கு மனைவியுடன் இணைந்து குழந்தை பெறுவதற்காக 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.


நந் லால் என்ற நபர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றவாளியாகச் சிறையில் அடைக்கப்பட்டார். திருமணமான அவருக்குக் குழந்தைகள் இல்லாததால் அவரது மனைவி ரேகா மட்டும் தனியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் அவரது மனைவி குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தன் கணவருக்கு பரோல் வழங்க வேண்டும் என மனு அளித்திருந்தார். இதனை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

Judgement
செளதி அரேபியா : விண்வெளித் துறையில் காலூன்றும் மத்திய கிழக்கு நாடுகள்

இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் “சிறையில் உள்ள ஆயுள் கைதியின் மனைவி குழந்தை பெற்றுக்கொள்வது அவரது அடிப்படை உரிமை. அவர் எந்த குற்றங்களையும் செய்யாத போதும் கணவன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தடுப்பது மனைவியின் உரிமையை மோசமாகப் பாதிக்கும்” எனக் கூறியது. ஒரு குற்றவாளியை இயல்பாக்குவதற்கும், அவர்களின் நடத்தையை மாற்றுவதற்கும் திருமண உறவுகள் உதவும் என்பதையும் கவனத்தில் கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.

எந்த தவற்றையும் செய்யாமல் கணவன் இல்லாமலும், பிள்ளைகள் இன்றியும் தவிக்கும் நிலைக்கு மனைவி தள்ளப்படக் கூடாது என வலியுறுத்தியது நீதிமன்றம். எந்த வெளிப்படையான விதிகளும் இல்லாத நிலையிலும் பல சமூக விஷயங்களைக் கருத்தில் கொண்டு மனைவியுடன் திருமண உறவில் ஈடுபட்டு குழந்தை பெற்றுக்கொள்ள ஆயுள் தண்டனை கைதி நந்த லாலுவுக்கு 15 நாட்கள் அவசர பரோல் வழங்கி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Judgement
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com