ராஜஸ்தான்: பாதிக்கப்பட்ட சிறுநீரகத்துக்கு பதிலாக நல்ல சிறுநீரகத்தை அகற்றிய மருத்துவர்கள்!

”இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த விவகாரத்தை விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தலைமைச் செயலர் கூறினார்.
(Rep image)
(Rep image)Canva
Published on

ராஜஸ்தானில் ஈத் பானு என்பவருக்கு பாதிக்கப்பட்ட இடது சிறுநீரகத்துக்கு பதிலாக, நல்ல நிலையில் இருந்த வலது சிறுநீரகத்தை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

ஈத் பானுக்கு சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் பரிசோதித்துள்ளனர்.

அப்போது பானுவுக்கு இது குறித்து உண்மை தெரிந்துள்ளது. அவருக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரா சிங் கூறுகையில், பெண் நோயாளியின் வலது சிறுநீரகத்திற்குப் பதிலாக இடது சிறுநீரகத்தை அகற்றிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

"இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த விவகாரத்தை விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

(Rep image)
ரத்தன் டாடாவின் செல்லபிராணிகளுக்கான மருத்துவமனை - நெகிழ்ச்சி பின்னணி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com