நாளை முதல் உங்களிடம் பேனா கேட்கமாட்டேன் - திருச்சி சிவாவிடம் உருகிய ஆனந்த் சர்மா!

ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும், காங்கிரசின் ஜெய்பால் ரெட்டியும் அடிக்கடி சக உறுப்பினர்களிடம் பேனா கேட்பார்களாம். இதையடுத்து மற்ற உறுப்பினர்கள் இவர்கள் இருவரும் வரும் போது தங்களது பேனாக்களை மறைவாக சைடு பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்கள் எனக் வெங்கையா நாயுடு கூற அவை முழுவதும் சிரிப்பு அலை எழுந்தது
 திருச்சி சிவா
திருச்சி சிவாTwitter
Published on

நாடாளுமன்ற மேலவையான ராஜ்யசபாவில் 72 உறுப்பினர்கள் ஓய்வு பெறுகிறார்கள். விடைபெறும் உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ஓய்வுபெறுபவர்களைப் பாராட்டிப் பேசிய உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி அவர்களது நினைவுகளை எடுத்துக் கூறி பேசினார்கள். அவை உணர்ச்சிகரமாக இருந்தது. ஓய்வு பெறும் உறுப்பினர்களில் சிலரோ பலரோ மீண்டும் மேலவை உறுப்பினர்களாக வரலாம் என்றாலும் இந்த விடைபெறும் நிகழ்வு உருக்கமானதாக இருந்தது.

விடைபெறும் 72 உறுப்பினர்களில் சிலர் நியமன உறுப்பினர்கள், மேலும் ஓய்வு பெறும் உறுப்பினர்கள் இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை விடைபெற இருக்கிறார்கள். இவர்களது எண்ணிக்கை ராஜ்யசபாவின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்த உறுப்பினர்கள் 19 மாநிலங்களைச் சேர்ந்த அனுபவசாலிகள்.

அவர்களில் ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, பி.சிதம்பரம், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், சுரேஷ் பிரபு, பிரஃபுல் பட்டேல், சுப்ரமணியம் சுவாமி, பிரசன்னா ஆச்சார்யா, சஞ்செய் ராத், நரேஷ் குஜ்ரால், சதீஷ் சந்தரா மிஷ்ரா, எம்.சி.மேரி கோம், ஸ்வபன்தாஸ் குப்தா, நரேந்தரி ஜாதவ் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அடக்கம்.

ஆனந்த் சர்மா
ஆனந்த் சர்மாTwitter

35% கூச்சல் குழப்பத்தால் கழிந்தது

இவர்களது பங்களிப்பைப் பாராட்டிப்பேசிய ராஜ்யசபாவின் தலைவர் வெங்கையா நாயுடு ஒரு விமரிசனத்தையும் முன்வைத்தார். 2017 ஆம் ஆண்டு முதல் மேலவையின் 35% நேரம் சபை கூச்சல் குழப்பத்தால் இழந்திருப்பதாக அவர் கூறினார். பிரதமர் மோடி பேசும் போது விடைபெறும் உறுப்பினர்கள் தங்களது சேவையை நாட்டிற்கு அளிக்கும் முகமாகத் தொடர வேண்டுமென்றார்.

எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது மேலவை என்பது எப்படி அறிஞர் பெருமக்களால் நிரம்பி வழிந்தது என்று நினைவு கூர்ந்தார். முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் அமைச்சர்கள் போன்றோர் இருந்த இந்த அவையில் அவர்களது அனுபவத்திலிருந்து நாம் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றார். கருத்து வேறுபாடு இருந்தாலும் நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது என்றார்.

 திருச்சி சிவா
டெல்லி குறித்து முதலைக் கண்ணீர் விடும் பாஜக – திரிணாமூல் எம்பி மொய்த்ரா விளாசல்

நாளை முதல் உங்களிடம் பேனா கேட்கமாட்டேன்

திமுகவின் திருச்சி சிவா பேசும் போது இந்த விடைபெறும் நிகழ்ச்சி என்பது உணர்ச்சிகரமாகவும், வலி நிறைந்த ஒன்றாகவும் உள்ளது என்றார். விடைபெறும் எனது சக உறுப்பினர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இது சாலையின் முடிவல்ல, ஒரு திருப்பம் என்று அவர் பேசினார். இந்த சபையில் அவர்களது பங்களிப்பு முடிந்தாலும் வேறு தளங்களில் அவர்களது பணிகள் தொடரும் என்றார்.

காங்கிரசின் ஆனந்த் சர்மா அடிக்கடி திருச்சி சிவாவிடம் பேனா கேட்பாராம். நேற்று அவர் சிவாவிடம் "நாளை முதல் உங்களிடம் பேனா கேட்கமாட்டேன்"? என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தானும், காங்கிரசின் ஜெய்பால் ரெட்டியும் அடிக்கடி சக உறுப்பினர்களிடம் பேனா கேட்பார்களாம். இதையடுத்து மற்ற உறுப்பினர்கள் இவர்கள் இருவரும் வரும் போது தங்களது பேனாக்களை மறைவாக சைடு பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்கள் எனக் கூற அவை முழுவதும் சிரிப்பு அலை எழுந்தது.

பாஜக ஆட்சிக்கு வந்ததும் அக்கட்சியின் கொள்கைகள் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூச்சல் குழப்பங்களோடுதான் நடந்தன. ஆனால் ஓய்வு என்று வரும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சரி, ஆளும் கட்சி உறுப்பினர்களும் சரி தமது கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட விதம் அனைவருக்கும் மனதைத் தொடும் விதமாக இருந்தது.

 திருச்சி சிவா
பணவீக்க அபாயம்: இந்தியாவில் உயரும் எரிபொருள் தேவை - என்ன நடக்கிறது?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com