பிறந்து 21 நாட்களே ஆன பெண் குழந்தையின் வயிற்றில் எட்டு கரு இருந்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரு உருவாகும்போது சில சமயங்களில் ஒரு கருவுக்குள் இன்னொரு கரு உருவாகி இருப்பது போன்ற சம்பவம் இதற்கு முன் உலகில் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது.
ஆனால் முதன்முறையாக ஒரு குழந்தையின் வயிற்றில் எட்டு கரு இருந்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் வயிறு வீங்கி இருப்பதை பார்த்து மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
அனைத்து சோதனைகளும் செய்து பார்த்தபோது வயிற்றில் கட்டி இருப்பதாக முடிவுக்கு வந்தனர் மருத்துவர்கள். அதன் பிறகு மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். குழந்தைக்கு வயிற்றில் இருந்த கட்டியை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்தபோது வயிற்றில் உள்ள கட்டியில் எட்டு கரு உருவாகி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது கருக்களை வெளியே எடுத்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.
ஒரு கருக்குள் இன்னொரு கரு உருவாகியுள்ள சம்பவம் நடந்திருக்கிறது, ஆனால் ஒரு கருக்குள் எட்டு கரு உருவாகியுள்ளது இதுவே முதல்முறை என இந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் இம்ரான் கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust