பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு 6 ஆண்டுகள் கழித்து 2000 ரூபாய் தாள்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
1000, 500 ரூபாய் தாள்கள் செல்லாது எனக் கூறிய பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் தாள்களை செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்ற ரிசர்வ் வங்கி காலக்கெடு வைத்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது 2019ம் ஆண்டே நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. மேலும், க்ளீன் நோட் என்ற கொள்கையின் அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டுகளை திருப்பப்பெறுகிறது ரிசர்வ் வங்கி.
2000 ரூபாயை திருப்பிக் கொடுக்க ரிசர்வ் வங்கி அறிவித்தது முதல் பலரும் இதனை அடுத்த டூமாண்டிசேஷன் எனக் கூறுவதைப் பார்க்க முடிந்தது. ஆனால் அப்படியல்ல!
பணமதிப்பிழப்பு என்பது குறிப்பிட்ட தேதிக்குள் பணம் மாற்றப்பட வில்லை என்றால் அதன் பிறகு அது செல்லாததாகிவிடும். ஆனால் 2000 ருபாய் விஷயத்தில் பணம் திரும்பப் பெறப்படுகிறது.
இதன்படி, புதிதாக 2000 தாள்கள் அச்சிடப்படாது. புழக்கத்தில் இருக்கும் தாள்கள் விரைவில் புழக்கத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல நாணயங்களை (பணத்தை) திரும்பப் பெறுவது அல்லது மதிப்பிழக்கச் செய்வது இதற்கு முன்னரும் நடைபெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட சம்பவங்களைப் பார்க்கலாம்.
அப்போது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது இந்தியா. இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த தருணத்தில் கறுப்பு சந்தை நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டதனால் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சிந்தமன் துவாரகநாத் தேஷ்முக்கின் ஆலோசனைப்படி 500 மற்றும் அதற்கு மேலான ரூபாய் நோட்டுகளை தடை செய்தது அரசாங்கம்.
ஜனவரி 12, 1946 அன்று, 500, 1000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து இரண்டு அவசரச் சட்டங்கள் வெளியிடப்பட்டன.
இந்த சட்டம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. 8 ஆண்டுகள் கழித்து 1954ம் ஆண்டு மூன்று ரூபாய் நோட்டுகளும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
1970 களின் முற்பகுதியில், முன்னாள் தலைமை நீதிபதி கைலாஷ் வாஞ்சூ தலைமையிலான அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நேரடி வரி விசாரணைக் குழுவான வாஞ்சூ கமிட்டி, கறுப்புப் பணம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சில நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ய பரிந்துரைத்தது.
ஆண்டுகள் கழித்து ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அரசாணையை 1978 ஜனவரி 16ம் ஆண்டு நிறைவேற்றினார்.
இதில் தடை செய்யப்பட்ட 1000 ரூபாய் தாள் 2000ம் ஆண்டு வாஜ்பாய் காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜனவரி 22, 2014ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி, மார்ச் 31, 2014க்கு பிறகு 2005க்கு முன்னர் அச்சிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளும் திரும்பப் பெறப்பட்டன.
ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து மக்கள் அனைவரும் வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றினர். 2005க்கு முன்னர் அச்சிடப்பட்ட நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
நவம்பர் 8 2016ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு இரவில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அப்போதே புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு குறித்து அறிவித்தது ரிசர்வ் வங்கி.
பணமதிப்பிழப்பு முடிவை அறிவிக்கும் போது, பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்க சட்டவிரோத மற்றும் கள்ளப் பணத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்கும் என்றார். கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என்று அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் கூறியிருந்தார்.
முன்னதாகக் கூறியபடி க்ளீன் நோட் கொள்கை அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
மே 23 முதல் செப்டம்பர் 30 வரை 2000 ரூபாய் நோட்டுகளை திருப்பித் தர காலக்கெடு விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust