இந்தியாவில் இப்போதைக்கு செயலில் இருக்கும் ஒரே எரிமலை - எங்கே இருக்கிறது தெரியுமா?

எரிமலையின் சூழல் அமைப்பை உறுதி செய்வதற்காக பயணிகள் யாரும் தீவில் கால் வைக்க அனுமதிக்கப்படவில்லை.
Reaching Barren Island, home to India’s only active volcano!
Reaching Barren Island, home to India’s only active volcano!Twitter
Published on

நமக்கு எல்லாம் காலையில் எழுவது, பேருந்தில் அடித்து பிடித்து வேலைக்கு அல்லது படிக்க செல்வது, அங்குள்ள பிரச்சனைகளை எல்லாம் சமாளிப்பதே பெரிய சாதனையாக இருக்கிறது. இதற்கிடையில், எங்கே போய் சாகசம் செய்ய? என்று நினைப்பது உண்டு.

ஆனால், சாகசம் செய்வதை பொழுதுபோக்காக கொண்டு சுற்றித் திரிபவர்களுக்கு இந்த இடம் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்த இடம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயருக்கு வடகிழக்கே சுமார் 135 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பாரன் என்று சொல்லக்கூடிய இந்த ஸ்வாரசியங்கள் நிறைந்த இடம் ஒரு தீவாகும்.

அந்த வகையில், இந்தியாவில் இப்போதைக்கு செயலில் இருக்கும் எரிமலை இந்த தீவில் தான் அமைந்துள்ளது.

இங்கு பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது பாரன் தீவு. இந்த பாரன் தீவுக்கு கடல் வழியாக படகில் தான் செல்ல முடியும்.

இந்தியாவில் இருந்து அரசு அல்லது தனியார் நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட டூர் ஆபரேட்டர்களை அழைத்துக் கொண்டு இந்த பகுதிக்கு செல்லலாம்.

இதற்கான நேரம் சில மணித்துளிகள் அல்லது ஒரு நாள் வரை எடுக்கும். இந்த சோர்வான பயண நேரத்தை வங்காள விரிகுடாவின் இயற்கை அழகு ரம்மியமாக மாற்றுகிறது.

Reaching Barren Island, home to India’s only active volcano!
ஏமன் : வேற்றுகிரகம் போல தோற்றமளிக்கும் அதிசய தீவு பற்றி தெரியுமா?

இப்போது, கப்பல் பயணம் முடிந்து எரிமலை சாகசத்திற்கு செல்லும் முன்னதாக பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏனென்றால், எரிமலையின் சூழல் அமைப்பை உறுதி செய்வதற்காக பயணிகள் யாரும் தீவில் கால் வைக்க அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், பார்வையாளர்கள் பாரன் தீவின் நீருக்கடியில் உள்ள அதிசயங்களை கண்டு களிக்கலாம். இங்கு செல்லும் பயணிகள் தங்களுக்கான உணவு, தண்ணீர், சன்ஸ்கிரீன், தொப்பிகள் மற்றும் சன்கிளாஸ்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

Reaching Barren Island, home to India’s only active volcano!
தீவு வாழ்க்கை,புத்த மத சாரல் - சொர்க்கத்தையே கண்முன் காட்சிப்படுத்தும் இலங்கை| Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com