அரேபிய கடலில் அமைந்துள்ள சொகோத்ரா தீவு, ஏமனின் ஒரு பகுதியாகும். இது பூமியின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இந்த தீவு அதன் குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான பல்லுயிரியலுக்கு பெயர் பெற்றது. இந்த தீவு மற்ற இடங்களிலிருந்து வேறுபடுகிறது.
உலகில் வேறு எங்கும் இல்லாத ஏராளமான தாவர மற்றும் விலங்கினங்கள் சோகோட்ரா தீவில் உள்ளன. இதனால் இந்த தீவு வேற்றுகிரகம் போன்று தோற்றமளிக்கிறது.
தீவின் மொத்த தாவர வகைகளில் மூன்றில் ஒரு பங்கு உள்ளூர் இனங்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவை அந்த தீவில் மட்டுமே காணப்படுகின்றன.
இந்த தீவில் ஒரு வித்தியாசமான மரம் உள்ளது. டிராகன் எனப்படும் இந்த மரம், குடை போன்று காட்சியளிக்கிறது. அவற்றை பார்த்தால் நமக்கும் ஏதோ வேற்றுகிரகம் போன்றது தான் தோன்றும்.
இந்த மரங்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை.
சோகோத்ரா தீவின் மாறுபட்ட நிலப்பரப்பு மற்றொரு சுவாரஸ்யமான விஷயமாகும்.
கரடுமுரடான மலைகள் முதல் சமவெளிகள்,கடற்கரைகள் வரை அனைத்தையும் இங்கே காணலாம்.
இந்த சிறிய தீவின் இயற்கை அழகில் நீங்கள் பிரமிக்கும் முன் அரேபிய, ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய கலாச்சாரங்கள் உட்பட வளமான கலாச்சார பாரம்பரியத்தை இங்கு காணலாம்.
சொகோத்ராவிற்கும் இந்தியாவிற்கும் பண்டைய வர்த்தக உறவுகள் இருந்ததாக கூட கூறப்படுகிறது.
சோகோத்ரா தீவு அவற்றின் தனித்துவமான மொழி, கலாச்சாரங்களின் கலவை, அற்புதமான இயற்கை அம்சங்களுக்காக யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கரீக்கப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust