"மசூதியில் ஒலிப் பெருக்கிகளை அகற்ற வேண்டும்" - ராஜ்தாக்கரே பேச்சால் பரபரப்பு

மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகளை மாநில அரசு அகற்றவில்லையெனில் எங்களது கட்சி தொண்டர்கள் மசூதிகளுக்கு வெளியில் ஒலி பெருக்கியை வைத்து ஹனுமான் பாடல்களைப் பாடுவார்கள் - ராஜ்தாக்கரே
ராஜ்தாக்கரே
ராஜ்தாக்கரே Twitter
Published on

மகாராஷ்டிரா மாநிலம் நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே மசூதிகளில் இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று சமீபத்தில் பேசியது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. அவர் பேசியதாவது,

``எந்த மதத்தின் பிரார்த்தனையையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகளை மாநில அரசு அகற்றவில்லையெனில் எங்களது கட்சி தொண்டர்கள் மசூதிகளுக்கு வெளியில் ஒலி பெருக்கியை வைத்து ஹனுமான் பாடல்களைப் பாடுவார்கள்.

மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கிகளுக்கு என்ன தேவை இருக்கிறது. நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் கிடையாது. மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருக்கும் குடிசைகளில் என்ன நடக்கிறது என்று மும்பை போலீஸாருக்கு தெரியும். அப்பகுதியில் ரெய்டு நடத்தவேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். குடிசை வாழ் முஸ்லீம் மக்களுக்கு ஆதார் கார்டு கூட கிடையாது. நமது எம்.எல்.ஏ-க்கள் அவர்களுக்கு அவை கிடைக்க உதவுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் சாதிரீதியாக மகாராஷ்டிரா மக்களை பிரித்துள்ளது. நாம் இந்த சாதிப்பிரச்னையிலிருந்து விடுபடாவிட்டால் நாம் எப்படி இந்துக்களாக மாற முடியும்?

உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது போன்ற ஒரு முன்னேற்றம் மகாராஷ்டிராவிலும் ஏற்படவேண்டும்.

ராஜ்தாக்கரே
முருக கடவுள், நெற்றித் திலகம் - இந்து பண்பாட்டை பிரதிபலிக்கும் ஈராக் யசீதி கலாசாரம்

எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களுக்கு கொடுக்கப்படும் பென்சனை ரத்து செய்யவேண்டும். எம்.எல்.ஏ-க்களுக்கு ஏன் வீடு கொடுக்கவேண்டும். அப்படி அவர்களுக்கு வீடு கொடுப்பதாக இருந்தால் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் வீடு கொடுக்கவேண்டும். எம்.எல்.ஏ-க்களுக்கு வீடு கொடுத்தால் அவர்களின் பண்ணை வீடுகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும்" எனப் பேசினார்.

ராஜ்தாக்கரே சிவசேனா கூட்டணியிலிருந்து விடுபட்டு பாஜகவுக்கு ஆதரவான அரசியலை முன்னெடுத்து வருகிறார். அவரது பேச்சுக்கு சிவசேனா கட்சி அவரை பாஜக-வின் மூன்றாவது அணி என்று விமர்சித்திருக்கிறது.

ராஜ்தாக்கரே
Baba Ramdev: பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பத்திரிகையாளரை திட்டிய பாபா ராம்தேவ்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com