ரூ.100 லஞ்சம் வாங்கிய ரயில்வே அதிகாரி: 32 ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட தண்டனை- என்ன நடந்தது?

தண்டனையை குறைப்பது மக்களிடையே தவறான ஒரு உதாரணத்தை பரப்பும் என்று கூறி, லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது லக்நோ சிறப்பு நீதிமன்றம்.
ரூ.100 லஞ்சம் வாங்கிய ரயில்வே அதிகாரி: 32 ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட தண்டனை- என்ன நடந்தது?
ரூ.100 லஞ்சம் வாங்கிய ரயில்வே அதிகாரி: 32 ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட தண்டனை- என்ன நடந்தது?News Sense
Published on

32 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லஞ்சத்திற்காக ஓராண்டு சிறை தண்டனை ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிக்கு விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வேவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராம் குமார் திவாரி. இவரது ஓய்வூதியத்தை கணக்கிட மருத்துவ சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. அதனை வழங்க ராம் நாராயண் வர்மா என்பவர் திவாரியிடம் ரூ.150 லஞ்சமாக கேட்டுள்ளார். பின்னர் ரூ.100 ஆக குறைத்ததாக திவாரி குற்றம்சாட்டியுள்ளார்

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவலளிக்கப்படவே, லஞ்சம் பெறும்போது கையும்களவுமாக ராம் நாராயண் பிடிப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 1991ல் நடந்தது. லஞ்சம் கேட்ட ரயில்வே அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 32 ஆண்டுகளுக்கு பிறகு, வழக்கு விசாரணைக்கு வந்தது.

லக்நோ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்ட ராம் நாராயணின் தரப்பு, அவரது வயது மூப்பை காரணம் காட்டி, அவருக்கு தண்டனையை குறைத்து கொடுக்கும்படி வாதிட்டது. மேலும் 1991ல் பிடிப்பட்டபோது இரண்டு நாட்கள் சிறையில் இருந்ததாகவும் அவரது தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தண்டனையை குறைப்பது மக்களிடையே தவறான ஒரு உதாரணத்தை பரப்பும் என்று கூறி, லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், ரூ.15,000 அபராதமாக செலுத்தவேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.

ரூ.100 லஞ்சம் வாங்கிய ரயில்வே அதிகாரி: 32 ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட தண்டனை- என்ன நடந்தது?
Paytm ஸ்கேனரை வைத்து வழக்கறிஞர்களிடம் லஞ்சம் வாங்கிய டவாலி - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com