ராணுவத்தில் பலியான கணவர்: 40 வயதில் இந்தியா முழுவதும் பயணித்த RJ கிருஷ்ணா - நம்பிக்கை கதை

இந்திய ராணுவத்தில் தன் கணவரை இழந்த பிறகு, புதிய வாழ்கையை அமைத்துக் கொண்டுள்ளார் RJ கிருஷ்ணா. தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
RJ கிருஷ்ணா
RJ கிருஷ்ணாTwitter
Published on

வாழ்கையில் எல்லோரும் ஏதோ ஒரு தாங்க முடியாத சோகத்தைக் கடந்த பிறகு தான் சாதனைப் பாதையைத் தொடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அந்த சோகத்திலேயே பலரும் கரைந்துவிடுகிறார்கள்.

சிலர் அதைக் கடக்க முயல்வதிலேயே வாழ்க்கை முடிந்துவிடுகிறது, வெகு சிலர் மட்டுமே அதை வெற்றிகரமாகக் கடந்து, புதிய வாழ்கையை வாழத் தொடங்குகிறார்கள். அப்படி ஒரு பெண், இந்திய ராணுவத்தில் தன் கணவரை இழந்த பிறகு, புதிய வாழ்கையை அமைத்துக் கொண்டுள்ளார். தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கொச்சினைச் சேர்ந்த கிருஷ்ணா 19 வயதாக இருக்கும் போதே, இந்திய விமானப் படையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது கணவர், ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.

அப்போது அதிகம் படிக்காத கிருஷ்ணாவை நம்பி, மூன்று மாதக் குழந்தையும் கையிலிருந்தது. தொடக்கத்தில் தன் சோகத்தைக் கடக்க முடியாமல் தவித்த கிருஷ்ணா மெல்ல அதைக் கடந்து கல்வியில் கவனம் செலுத்தினார்.

படித்து முடித்த பின், அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். அந்த பணி அவரை முழுமையாகச் சோகத்திலிருந்து வெளிக் கொண்டு வந்தது. தற்போது ரேடியோ ஜாக்கியாகப் பணி செய்து வருகிறார். கிருஷ்ணாவுக்கு மெல்ல இருசக்கர வாகனங்கள் மீது காதல் ஏற்பட்டது.

சமீபத்தில் 2022 ஏப்ரல் மாதம், தன்னைப் போல ராணுவத்தில் உயிர்த் தியாகம் செய்து கணவனை இழந்த பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இந்தியா முழுக்க ஒரு சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம் என ஒரு யோசித்திருக்கிறார் கிருஷ்ணா. உடனடியாக அத்திட்டத்தைச் செயல்படுத்தச் சாலையில் தன் இருசக்கர வாகனத்தோடு ஆக்சிலேட்டரை முறுக்கினார்.

RJ கிருஷ்ணா
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

கடந்த 2022 ஏப்ரல் 11ஆம் தேதி தன் பயணத்தைத் தொடங்கினார். கடந்த ஜூலை 3ஆம் தேதி சனிக்கிழமை தன் பயணத்தை நிறைவு செய்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நீண்ட பயணத்தின் போது, இந்தியாவில் உள்ள சுமார் 25 அனைத்து இந்திய வானொலி நிலையங்களுக்குச் சென்றுள்ளார்.

RJ கிருஷ்ணா
ரஜனி பண்டிட் : 22 ஆண்டுகளில் 80000 வழக்குகளை தீர்த்த லேடி ஜேம்ஸ் பாண்ட் - Detective-ன் கதை

இந்த பயணத்தின் போது வட கிழக்கு இந்தியா, தெற்கு பகுதியில் உள்ள இந்திய மாநிலங்கள், மத்திய இந்தியா எனப் பரவலாகப் பயணம் செய்துள்ளார். கிருஷ்ணா தன் பயணத்தில் 9,000 கிலோமீட்டர் பயணித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சோகத்தில் ஊறி உடைந்து போகாமல், இன்று கம்பீரமாகத் தன்னைப் போன்ற பெண்களுக்கு உற்சாகமளிக்க 9,000 கிலோமீட்டர் பயணித்த கிருஷ்ணா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

RJ கிருஷ்ணா
33 வயதுக்குள் 70 நாடுகள் சுற்றிய பெண்: தங்கும் செலவு ஒரு பைசா கூட இல்லை - எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com