33 வயதுக்குள் 70 நாடுகள் சுற்றிய பெண்: தங்கும் செலவு ஒரு பைசா கூட இல்லை - எப்படி?

"நான் பயணம் செய்வதை பார்க்கும் பலர் என்னை பணக்கார பெண்ணாக நினைக்கின்றனர். ஆனால் அப்படியல்ல. எந்த நாட்டிலும் எனக்கு தங்கும் செலவு பூஜ்ஜியம் தான். அத்துடன் சில வழிகளைப் பயன்படுத்தி செலவை குறைத்துக் கொண்டால் போதும்" என்கிறார் அந்த 33 வயது பெண். இவர் இப்போது வரை 70 நாடுகளுக்கும் மேல் பயணித்திருக்கிறார்.
சிபு டி பெனடிக்டிஸ்
சிபு டி பெனடிக்டிஸ்Twitter

பயணம் செய்வதில் ஆசை இல்லாத நபர்கள் மிகக் குறைவே. நமது வசதிக்கு ஏற்ப ஊருக்கு பக்கத்தில் இருக்கும் சின்ன சின்ன இடங்கள் தொடங்கி காடு மலை என சுற்றித் திரிவோம். எவ்வளவு தூரம் போனாலும் இன்னும் கொஞ்ச தூரமென இயற்கை அழைப்பது நிற்காது. எனினும் நம் வரம்பை கடந்து பயணிக்க முடியாது. வெகு சிலரே உலகம் முழுவதும் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

நம் கால்களை கட்டிப் போட்டு பயணத்தை தடுப்பது பெரும்பாலும் பண பிரச்னையே! ஆனால் சரியாக திட்டமிட்டு பயணம் செய்தால் இந்த பிரச்னை இல்லை என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

சிபு டி பெனடிக்டிஸ் என்ற பெண் ஒரு பயணக்காதலி. இவர் தனது பள்ளிப் படிப்பு முடிந்ததில் இருந்து இப்போது வரை 70 நாடுகளுக்கும் மேல் பயணித்திருக்கிறார். "நான் பயணம் செய்வதைப் பார்க்கும் பலர் என்னை பணக்கார பெண்ணாக நினைக்கின்றனர். ஆனால் அப்படியல்ல. எந்த நாட்டிலும் எனக்கு தங்கும் செலவு பூஜ்ஜியம் தான். அத்துடன் சில வழிகளைப் பயன்படுத்தி செலவை குறைத்துக் கொண்டால் போதும்" என்கிறார் அந்த 33 வயது பெண்.

சிபு டி பெனடிக்டிஸ்
சிபு டி பெனடிக்டிஸ்Twitter

பல ஆண்டுகளாக பயணம் செய்து வரும் இவரை ஒரு Pro Traveler என்றே கூறலாம். சிறிய பட்ஜெட்டில் பயணங்களை மேற்கொள்வதற்காக இவர் பல ட்ரிக்குகளை உபயோகித்து வருகிறார். எந்த நாட்டில் எந்த ஊருக்கு சென்றாலும் அவர் தங்குவதற்கு ஹோட்டல்களோ, ஹோம் ஸ்டேயோ தேர்ந்தெடுப்பதில்லை.

அவர் இத்தனை ஆண்டுகாலம் பயன்படுத்திய தந்திரத்தை தற்போது வெளியில் கூறியுள்ளார். பெரும்பாலும் உரிமையாளர்கள் வெளியூரில் இருக்கும் வீடுகளில் தான் தங்குவாராம்.

"பண விஷயத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருந்தால் பயணம் கட்டுப்படியாகாத விஷயமெல்லாம் இல்லை" என்கிறார் சிபு.

"பெரிய நகரங்களில், பெரிய கடைகளில் நீங்கள் செலவழிப்பதை விட சிறிய இடங்களில் அதன் செலவுகள் குறைவு தான்.

நீங்கள் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் இங்கு பல விஷயங்கள் இலவசமாகவே கிடைக்கும்." எனக் கூறும் சிபுவுக்கு நாடு விட்டு நாடு செல்வது ஒன்றும் புதிதல்ல.

அவர் பள்ளி கல்வியையே அமெரிக்கா, கோஸ்டாரிக்கா என இரண்டு நாடுகளில் படித்தார். கல்லூரிக்காக சீனா சென்றார்.

"என்னிடம் இருக்கும் மொத்த பொருட்களையும் ஒரு சூட்கேஸில் அடைத்துவிட முடியும். இதனால் நான் எந்த இடத்துக்கும் எளிதாக சென்று விட முடிகிறது" எனும் சிபு பயணம் செய்துள்ள 70 நாடுகளில் போலந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, நிகரகுவா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக நாட்கள் தங்கியுள்ளார்.

சிபு டி பெனடிக்டிஸ்
சிபு டி பெனடிக்டிஸ்Twitter

"நான் கடந்த சில ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்திலேயே வேலை செய்து வருகிறேன். கொஞ்சம் சம்பளத்திலேயே அதிகம் ஊர் சுற்ற முடியும் என்பதற்கு என் வாழ்க்கை தான் சாட்சி" என சொல்லும் சிபு, தொடர்ந்து பயணம் செய்து வருவதனால் பல நாடுகளில் பல வேலைகளைச் செய்திருக்கிறார். உணவகங்களில் வெயிட்டராக, பாத்திரம் கழுவுதல், பார்களில் வேலை என பல வேலைகளைச் செய்திருக்கிறார் அவர்.

சிபு டி பெனடிக்டிஸ்
ரஷ்யா யாகுட்ஸ்க் - உலகின் குளிர்ச்சியான இந்த நகரம் குறித்து தெரியுமா?

பல ஆண்டுகளாக படிப்புக்கு நடுவில் பயணங்களை மேற்கொண்டு வந்த சிபு ஜெர்மனியில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். அங்கு தனது உடைமைகள் அனைத்தையும் ஒரு இடத்தில் பத்திரப்படித்தி விட்டு இப்போது வரை ஓர் நவீன நாடோடியாக திரிகிறார்.

அவர் இலவசமாக மற்றவர்கள் வீடுகளில் தங்குவதன் ரகசியம் இது தான். அவர் Trusted Housesitters என்ற செயலியில் உறுப்பினராக உள்ளார். இந்த செயலில் பெரிய பங்களாக்கள் கூட கிடைக்கும். அதில் நாம் இலவசமாக தங்க முடியும். அதற்கு கைமாறாக அவர்களின் வீட்டை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்!

சில நேரங்களில் இதில் அவர்களின் செடிகள் மற்றும் செல்லபிராணிகளை கவனித்துக் கொள்வதும் அடங்கும்.

Sibu
SibuTwitter

அதிக பொருட்களை வாங்கிச் சேர்க்கும் இந்த யுகத்தில் மிகக் குறைந்த பொருட்களுடன் வாழ்வது எப்படி என கற்றுத்தருகிறார் சிபு. அவர் ஆப்ரிக்காவைச் சுற்றும் போது அங்கு வெயில் அதிகமாக இருந்ததால் உடைகளை மொத்தமாக குறைத்துக் கொண்டாராம்.

சராசரியாக அவர் கையில் 7 டாப் மற்றும் 7 பேன்ட் தான் இருக்குமாம்.

சிபு டி பெனடிக்டிஸ்
83 வயதில் சோலோ ட்ரிப்: பசிபிக் கடலில் தனியாக பயணித்த ஜப்பான் முதியவர்

"சம்பாதிக்கும் பணத்தை, நமக்கு அதிக அனுபவங்களைத் தரும் வகையில் செலவு செய்வது அவசியம். ஒரு டாலரை இங்கு செலவு செய்வதை விட வேறு எங்காவது அதிக மதிப்புடையதாக செலவழிக்க முடியுமா என சிந்திக்க வேண்டும்" என்கிறார் சிபு.

பயணம் செய்வதற்கு மற்றொரு வழி கல்வி உதவித் தொகை. எந்த நாட்டில் கல்வி உதவித் தொகை கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது சிபுவின் ஐடியா!

இதுவரை அவர் 8 நாடுகளில் 8 வித்தியாசமான பட்டபடிப்புகளை முடித்துள்ளார்.

அவர் உகாண்டாவில் இருந்து டான்சானியா செல்லும் போது வெளிநாட்டு பயணிகளை ஊர்சுற்ற அழைத்துச் செல்லும் ட்ராவல் நிறுவனத்தில் பணிபுரிந்தாராம். எதிர்காலத்திலும் இது மாதிரி வேலைகள் செய்ய விரும்புகிறாராம்.

சிபு டி பெனடிக்டிஸ்
"திமிங்கலங்கள் தான் எனக்கு துணை" - ஒரு கை, ஒரு கால் இல்லாமல் தனியாக உலகை சுற்றிவந்த நபர்

தனது பயண அனுபவங்களை money-savvy travellers என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் சிபு.

"நான் எத்தனை குறிப்புகள் ட்ரிக்குகளை பகிர்ந்து கொண்டாலும் நீங்கள் உங்கள் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு புறப்பட வேண்டும். அது தான் முக்கியம்" என முடித்துக்கொண்டார் சிபு.

"நீங்கள் அதிகமாக பயணிக்க முடியும் போது உலகம் அதிக அழகானதாக இருக்கும்" - சிபு

சிபு டி பெனடிக்டிஸ்
தேசாந்திரியின் தடங்கள் : ஏன் சுவீடன், நார்வே சொர்க்கபுரியாக இருக்கிறது? | பகுதி 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com