மணமகனுக்கு ஹெலிகாப்டர் பரிசாக அளித்த மணமகள் குடும்பம் - இந்தியாவில் நடந்த ஆடம்பர திருமணம்!

திருமணத்திற்கு 2,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு வெள்ளி பொருட்கள் சஃபாரி உடை மற்றும் 40,000 ரூபாய் ரொக்கம் பரிசாக அளிக்கப்பட்டது.
மணமகனுக்கு ஹெலிகாப்டர் பரிசாக அளித்த மணமகள் குடும்பம் - இந்தியாவில் நடந்த ஆடம்பர திருமணம்!
மணமகனுக்கு ஹெலிகாப்டர் பரிசாக அளித்த மணமகள் குடும்பம் - இந்தியாவில் நடந்த ஆடம்பர திருமணம்!Twitter

இந்தியாவை பொறுத்தவரை திருமணங்கள் ஆடம்பரமாகவும் கொண்டாட்டங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அதே போல் திருமணங்களுக்கு செய்யப்படும் செலவும் அவ்வபோது பேசு பொருளாகும்.

அந்த வகையில் 2011-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற திருமணம் தற்போது மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.

டெல்லியின் அப்போதைய காங்கிரஸ் தலைவர் கன்வர் சிங் தன்வாரின் மகனுக்கும், முன்னாள் எம்.எல்.ஏ ஜவுனாபூரியாவின் மகளுக்கும், நடைபெற்ற திருமணம் தான் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

இந்த திருமணத்திற்காக செலவிடப்பட்ட தொகை சரியாக வெளிவரவில்லை என்றாலும் திருமண செலவு ரூ 500 கோடி என்று பிரபல வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டது .

இந்த திருமணத்தில் மணமகளின் குடும்பத்தினர் மணமகனுக்கு பெல் 429 ஹெலிகாப்டரை பரிசாக அளித்தனர் , ஐந்து இருக்கைகளை கொண்ட இந்த ஹெலிக்காப்டரின் மதிப்பு 2011 -ல் சுமார் 33 கோடி என கூறப்பட்டது.

திருமணத்திற்கு 2,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு வெள்ளி பொருட்கள் சஃபாரி உடை மற்றும் 40,000 ரூபாய் ரொக்கம் பரிசாக அளிக்கப்பட்டது.

மணமகனுக்கு ஹெலிகாப்டர் பரிசாக அளித்த மணமகள் குடும்பம் - இந்தியாவில் நடந்த ஆடம்பர திருமணம்!
நரேந்திர மோடி: பிரதமரால் உத்திரபிரதேசத்தில் நின்ற திருமணம்! கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்
marriage
marriageTwitter

திருமண மண்டபத்திற்கு செல்லும் சாலையின் மூன்று கிலோமீட்டர் தூரம் மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு விருந்தினர்களுக்கு 100 க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.

மேலும் இந்த ஜோடி டெல்லியின் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிற பெரிய அரசியல்வாதிகள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த செய்தி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மணமகனுக்கு ஹெலிகாப்டர் பரிசாக அளித்த மணமகள் குடும்பம் - இந்தியாவில் நடந்த ஆடம்பர திருமணம்!
மசூதியில் இந்து முறைப்படி திருமணம் - ஏ.ஆர் ரஹ்மான் ஷேர் செய்த இன்னொரு Kerala Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com