Rural Tourism : இந்தியாவில் பார்க்க வேண்டிய 5 கிராமங்கள் - அப்படி என்ன இருக்கிறது?

நகரங்களின் சலசலப்பில் இருந்து ஓய்வு பெற, பசுமை நிறைந்த, நகரமயமாக்கப்படாத இடங்களுக்கு பயணிப்பதன் மூலம், உங்களின் மனநிலை மாறும், புத்துணர்ச்சி பெறும். அப்படி கிராம வாழ்க்கை அனுபவத்திற்காக இந்தியாவில் பார்க்க வேண்டிய முக்கிய 5 இடங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
Rural Tourism: 5 places to visit in India for a rich village life experience
Rural Tourism: 5 places to visit in India for a rich village life experienceTwitter

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாத் துறையில் கிராமப்புற சுற்றுலா ஒரு முக்கிய பகுதியாகும். பசுமையான காடுகளில் நடப்பது முதல் மலைகள் ஏறுவது வரை என பல இடங்கள் கிராமப்புற சுற்றுலாவில் உள்ளன.

நகரங்களின் சலசலப்பில் இருந்து ஓய்வு பெற, பசுமை நிறைந்த, நகரமயமாக்கப்படாத இடங்களுக்கு பயணிப்பதன் மூலம், உங்களின் மனநிலை மாறும், புத்துணர்ச்சி பெறும். அப்படி கிராம வாழ்க்கை அனுபவத்திற்காக இந்தியாவில் பார்க்க வேண்டிய முக்கிய 5 இடங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

மவ்லின்னாங்

மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்லின்னாங் கிராமம் மிகவும் பிரபலமான கிராம சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. இந்த கிராமம் ஆசியாவிலேயே "தூய்மையான கிராமம்" என்று குறிப்பிடப்படுகிறது.

500 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் உற்பத்தியாகும் கழிவுகள் அனைத்தும் சிறப்புக் கழிவு மேலாண்மை அமைப்பு மூலம் உரமாக்கப்படுகிறது. கிராமத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுவதுடன் பிளாஸ்டிக் பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பசுமை மற்றும் தூய்மையான கிராமம் விருதுகளை வென்றுள்ளது.

கட்ச்

கட்ச் குஜராத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கைவினைஞர் சமூகங்களையும், உப்பு பாலைவனத்தையும் நீங்கள் இங்கு ஆராயலாம். கூடாரங்கள் அல்லது மண் வீடுகளில் தங்கும் வசதிகள் அங்கு உள்ளன. அவை பார்வையாளர்களுக்கு ஒரு கிராமத்தில் வாழும் உணர்வை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டன.

பிபிலி

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் தான் இந்த பிபிலி. இந்த சிறிய கிராமத்தை ஒருவர் நெருங்கும்போது, ​​பார்வையாளர்களை கைவினைப்பொருட்கள் கண்கவரசெய்கிறது. கைவினைப்பொருட்கள் ஒவ்வொரு கடையையும் வெவ்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் அலங்கரிக்கின்றன. குடைகள் முதல் விளக்குகள், குஷன் கவர்கள், பைகள், தலையணை கவர்கள் போன்ற கைவினைப்பொருட்களை இங்கு வாங்கலாம்.

ஸ்பிட்டி

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு நீங்கள் புத்த மடாலயங்களுக்குச் செல்லலாம், கிராமங்களுக்கு மலையேற்றம் செய்யலாம். அங்குள்ள ஹோம்ஸ்டேகளில் தங்கலாம். அங்கு அவ்வப்போது நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம்.

Rural Tourism: 5 places to visit in India for a rich village life experience
உலகில் மழையே பெய்யாத கிராமம் இது தானா? எமன் நாட்டின் அல் ஹுதாயிபின் கதை என்ன? | Fact Check

சித்ரகோட்

பழங்குடி கலாச்சாரத்தைப் பற்றி அறிய விரும்பினால், சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரமான சித்ரகோட்டைப் பார்வையிடவும். இங்கு இருக்கும் சித்திரகூட அருவி நிச்சயம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த கிராமத்தில் வேடிக்கையான நிகழ்வுகள், நாட்டுப்புற கலைகள் போன்றவற்றை நீங்கள் அனுபவிக்கலாம். தண்டேஸ்வரி சன்னதி மற்றும் ஜக்தல்பூர் அரண்மனைக்கும் சென்று வாருங்கள்.

Rural Tourism: 5 places to visit in India for a rich village life experience
உலகிலேயே தூய்மையான காற்று இருக்கும் கிராமம் - Edge Of The World என அழைக்கப்படுவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com