தன்னுடன் செல்ஃபீ எடுக்க வந்த மைதான பணியாளர் ஒருவரை, தன் மீது உரசாமல், நகர்ந்து செல்லுமாறு இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கைக்வாட் சைகை செய்துள்ள சம்பவம் இணையதளத்தில் பேசும் பொருளாகி உள்ளது.
இவரது இந்த நடவடிக்கையைப் பலரும், மரியாதையற்ற செயல் என்றும், தலைகனத்தோடு நடந்துகொள்கிறார் என்றும் வசை பாடி வருகின்றனர்
இந்தியா- தென் ஆப்ரிக்காவுக்கு இடையேயான டி20 தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தென் ஆப்ரிக்கா வென்றிருந்த நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியை பதிவு செய்து "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்ற பாணியில் தொடரைச் சமன் செய்தது இந்தியா
நேற்று ஞாயிறு அன்று, இந்த தொடர் யார் கைக்கு போகும் என்ற டிசைடர் போட்டி பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்தது. ஆனால் மழையின் காரணமாக வெறும் 3.3 ஓவர்கள் தான் வீசப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி இரண்டு விக்கெட்களையும் இழந்திருந்தது.
ஓபனிங்க் பேட்டரான ருதுராஜ் கைக்வாட் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். இதில் ஒரு பவுண்டரி அடங்கும். இந்த தொடர் மொத்தத்திலுமே பெரிதாக சோபிக்காத ருதுராஜ், மூன்றாவது போட்டியில் மட்டும் அரைசதம் அடித்திருந்தார்.
இதனால் ஏற்கனவே கோபத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு, நேற்றைய ஆட்டத்தில் ருதுராஜின் நடவடிக்கை பெரிதும் ஏமாற்றமாக அமைந்தது.
டாஸை வென்ற தென் ஆப்ரிக்கா, பவுலிங்கை தேர்வு செய்ய, ஒபனிங்க் களமிறங்க ருதுராஜ் மற்றும் இஷான் கிஷன் காத்திருந்தனர். மழையின் காரணமாக களமிறங்க காத்திருந்த நேரத்தில், மைதானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ருதுராஜுடன் செல்ஃபீ எடுக்க வந்தார். அப்போது ருதுராஜ் அந்த ஊழியரை தன் மேல் உரசாமல் நகர்ந்து செல்லுமாறு காண்பித்த சைகை ரசிகர்களின் முக சுழிப்புக்கு காரணமாகியுள்ளது.
இந்த நடவடிக்கையைப் பலரும் "Disrespectful", அதாவது மரியாதையின்மை என்று கூறி வருகின்றனர். மேலும் இது தலைக்கனம் நிறைந்த செயல் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
காரணம், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்புக்காகவும் நலனைக் கருத்தில் கொண்டும் பணியாற்றுபவர்கள் இந்த கிரவுண்ட்ஸ்மென் (Groundsmen) எனப்படும் மைதான ஊழியர்கள். அவர்களை பாராட்டாவிட்டாலும், இப்படி மரியாதை இல்லாமல் நடத்த வேண்டாமே என்பது தான் பலரின் ஆதங்கம்.
மேலும் கொரோனா பெருந்தொற்று துவங்கிய காலத்திற்கு பிறகு எப்போது விளையாட்டுப்போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதோ, அப்போதிலிருந்து Bio Bubble-லுக்குள் வரும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்புக்கு கிரிக்கெட் வாரியம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் மைதானத்தில் பணியமர்த்தப்படும் ஊழியர்களை அவ்வளவு எளிதாக வீரர்களுடனோ, வீரர்கள் அருகிலோ விடமாட்டார்கள்.
அப்படியிருக்க, எதை நினைத்து ருதுராஜ் அந்த ஊழியரை துரத்தினார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது செயலால் டிஸ்ஸப்பாய்ன்ட் ஆன நெட்டிசன்ஸ், ருதுராஜ் இந்த உயர்ந்த ஸ்தானத்தில் விளையாட தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும், கோலி, ரோகித் போன்ற அனுபவமிக்க இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் இந்த மைதான ஊழியர்களை நடத்தும் விதத்தை எடுத்துக்காட்டி, தன் கரியரின் ஆரம்பக்காலத்திலேயே ருதுராஜ் இவ்வாறு நடந்துகொள்வது எவ்வளவு தவறு என்பதையும் கூறி வருகின்றனர்
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust