Sania Mirza : இந்தியாவின் முதல் பெண் முஸ்லீம் போர் விமானி - பெருமைகொள்ளும் கிராம மக்கள்!

இந்தி வழிக் கல்வியில் பயின்றவர்களும் மிகப் பெரிய உயரங்களை அடைய முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் என்று சிலாகிக்கின்றனர் அவரது கிராமத்து மக்கள்.
Sania Mirza : இந்தியாவின் முதல் பெண் முஸ்லீம் போர் விமானி - பெருமைகொள்ளும் கிராம மக்கள்!
Sania Mirza : இந்தியாவின் முதல் பெண் முஸ்லீம் போர் விமானி - பெருமைகொள்ளும் கிராம மக்கள்! Twitter
Published on

உத்தரபிரதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிவி மெக்கானிக்கின் மகள் சானியா மிர்சா.

இவர் இந்திய விமானப்படைக்கு தேர்வாகியிருப்பதன் மூலம் இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் போர் விமானியாகி சாதனைப் படைத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் வெற்றியடைந்த இவர் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

விமானியாக பயிற்சி பெற வரும் டிசம்பர் 27ம் தேதி புனேவில் உள்ள NDA Khadakwasla பள்ளியில் இணைய உள்ளார் சானியா.

சானியா மிர்சா ஜசோவர் என்ற கிராமத்தில் உள்ள சிறிய இந்தி வழிப் பள்ளியில் படித்தவர்.

இந்தி வழிக் கல்வியில் பயின்றவர்களும் மிகப் பெரிய உயரங்களை அடைய முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் என்று சிலாகிக்கின்றனர் அவரது கிராமத்து மக்கள்.

இந்தியாவின் முதல் பெண் விமானியான அவ்னி சதுர்வேதி தான் சானியாவின் ரோல் மாடலாம்.

சிறுவயது முதலே அவரை பின்பற்றி வந்த சானியா மிர்சா 12ம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.

Sania Mirza : இந்தியாவின் முதல் பெண் முஸ்லீம் போர் விமானி - பெருமைகொள்ளும் கிராம மக்கள்!
மானசா கோபால் : உணவு டெலிவரி செய்ய 4 கண்டங்கள் கடந்து 30,000 கி.மீ பயணித்த பெண் - ஏன்?

சானியா மிர்சா தனது சாதனையை பெற்றோருக்கும் அவர் படித்த செஞ்சுரியன் பாதுகாப்பு அகாடமிக்கும் சமர்பித்துள்ளார்.

சானியா மிர்சா தங்களையும் மொத்த கிராமத்தையும் பெருமையடையச் செய்துள்ளதாக அவரது தாய் தபாசும் மிர்சா கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வின் மூலம் 400 இடங்கள் நிரப்பப்பட்டன. அதில் 19 இடங்களே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

அதிலும் 2 இடங்களே பெண்களுக்கு அளிக்கப்பட்டது. அதில் ஒன்றை அடைந்துள்ளார் சானியா.

தனது முதல் முயற்சியில் தோல்வியடைந்தாலும் இரண்டாவது முயற்சியில் அவருக்கு இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

Sania Mirza : இந்தியாவின் முதல் பெண் முஸ்லீம் போர் விமானி - பெருமைகொள்ளும் கிராம மக்கள்!
17 வருடங்களாக முகத்தில் தாடியுடன் வாழும் இளம் பெண் - என்ன சொல்கிறார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com