மானசா கோபால் : உணவு டெலிவரி செய்ய 4 கண்டங்கள் கடந்து 30,000 கி.மீ பயணித்த பெண் - ஏன்?

இது உலகின் மிக நீளமான உணவு டெலிவரி ஆகும். மானசா கோபால் என்ற அந்த பெண்ணுக்கு அண்டார்டிகா கண்டத்திலிருக்கும் ஒருவரிடம் இருந்து உணவு ஆர்டர் வந்துள்ளதாக தெரிகிறது.
மானசா கோபால்
மானசா கோபால்Instagram
Published on

வாடிக்கையாளருக்காக சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவுக்கு சென்று உணவு டெலிவரி செய்துள்ள பெண் கவனம் பெற்று வருகிறார்.

வாடிக்கையாளர்களின் மன நிறைவு தான் எந்த ஒரு நிறுவனத்திற்கும் முக்கிய இலக்கு. இதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் சில சமயங்களில் அசாத்தியமானதாக இருக்கிறது.

இங்கும் ஒரு பெண் 30,000 கிலோமீட்டர், 4 கண்டங்கள் கடந்து சென்று அவரது வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்துள்ளார்.

இது உலகின் மிக நீளமான உணவு டெலிவரி ஆகும். மானசா கோபால் என்ற அந்த பெண்ணுக்கு அண்டார்டிகா கண்டத்திலிருக்கும் ஒருவரிடம் இருந்து உணவு ஆர்டர் வந்துள்ளதாக தெரிகிறது. அதை அவருக்கு நேரில் சென்று டெலிவரி செய்துள்ளார் மானசா.

சிங்கப்பூரிலிருந்து உணவு பாக்கெட் உடன் புறப்பட்ட மானசா, ஹம்பர்க், பியெனோஸ் ஏரிஸ், உஷுவாயா ஆகிய இடங்களுக்கு பயணித்து, பின்னர் அங்கிருந்து அண்டார்டிகாவை அடைந்தார்.

சிங்கப்பூர் ஆசியக் கண்டத்திலிருக்கிறது. ஹம்பர்க் ஜெர்மனியிலிருக்கும் ஒரு நகரம். ஜெர்மனி மேற்கு ஐரோப்பிய நாடாகும். தெற்கு அமெரிக்க நாடான அர்ஜெண்டீனாவின் தலைநகர் தான் இந்த பியெனோஸ் ஏரிஸ். உஷுவாயாவும் அர்ஜெண்டீனாவின் ஒரு நகரமாகும்.

மானசா ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களை கடந்து நான்காவதாக அண்டார்டிகாவை சென்றடைந்துள்ளார். இந்த பயணத்தின் தூரம், 30,000 கிலோமீட்டருக்கும் அதிகம்! மானசா தனது பயணத்தை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் nomaadonbudget என்ற கணக்கிலிருந்து பதிவு செய்தார். இது அதிக கவனத்தை பெற்று வருகிறது.

அந்த வீடியோவில் மானசா கடுமையான பனிபொழிவுகள், சேறு நிறைந்த பாதைகளை கடந்து செல்வது பதிவாகியுள்ளது. இத்தனை தடைகளை கடந்து, வாடிக்கையாளரின் வீட்டிற்கு சென்று உணவை கையில் கொடுத்தார்.

மானசாவின் இந்த பயணம் ஃபுட் பாண்டா என்ற நிறுவனம் மூலம் நிறைவேறியது. ஃபுட் பாண்டா என்பது ஸ்விக்கி, சோமேட்டோ போன்றதொரு நிறுவனம் தான்.

மானசா இதற்கு முன்னர் பதிவிட்டிருந்த போஸ்ட் ஒன்றில் அண்டார்டிகாவுக்கு பயணம் மேற்கொள்ள நிதி திரட்டவேண்டும் எனவும், அதற்கு ஸ்பான்சர் செய்ய பிராண்டை தேடி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு, ஒரு மாதத்திற்கு முன்பு ஃபுட் பாண்டாவிடமிருந்து தனக்கு பதில் கிடைத்ததாகவும், அவர்கள் தனக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்ததாகவும் மானசா கூறியிருந்தார். மானசாவின் இந்த வீடியோவிற்கு 38,000த்துக்கும் மேலான பார்வைகளும், கமெண்ட்டுகளும் கிடைத்திருந்தன.

மானசா கோபால்
” ஒரு பைசா கூட வேண்டாம்” உலகம் முழுவதும் பயணம் செய்து மோசமான வீடுகளை சுத்தம் செய்யும் பெண்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com