சிங்கத்தோடு சேர்ந்து வாழும் மக்கள்; ஓர் இந்திய கிராமத்தின் அடடே பின்னணி?

இங்கு உள்ள கிராம மக்கள் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் பாண்டு பழங்குடியினரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் உள்ள தனித்துவமான பழங்குடி சமூகங்களில் இவர்களும் ஒன்று.
Sassan Gir, the village of free roaming lions
Sassan Gir, the village of free roaming lionsTwitter
Published on

பொதுவாக கிராமங்களில் ஆடுகள், மாடுகள் போன்ற வீட்டு விலங்குகள் சாலைகளில் சுதந்திரமாகவும் மனிதர்களோடு இணக்கமாக சுற்றி வருவதை பார்த்திருப்போம்.

ஆனால் குஜாரத் மாநிலத்தின் சாசன் கிர் என்ற கிராமத்தில் சிங்கங்கள் சாதரணமாக உலா வருகின்றன.

அவற்றை கண்டு கிராம மக்கள் அஞ்சாமல் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்? கேட்கவே விநோதமாக இருக்கின்றது அல்லவா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

சாசன் கிர் கிராமம் குஜாரத் மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற கிர் தேசிய பூங்கா உள்ளது. இங்குதான் ஆசிய சிங்கங்கள் என்று அழைக்கப்படும் இந்திய தேசிய சிங்கங்கள் அதிக அளவு வாழ்கின்றன.

இந்த தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ளது சாசன் கிர் கிராமம்.

இங்கு உள்ள கிராம மக்கள் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் பாண்டு பழங்குடியினரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் உள்ள தனித்துவமான பழங்குடி சமூகங்களில் இவர்களும் ஒன்று.

Sassan Gir, the village of free roaming lions
Bera : மனிதர்களும் சிறுத்தைகளும் ஒன்றாக வாழும் இந்திய கிராமம்- அசரடிக்கும் தகவல்கள்

இந்த கிராமத்தின் ஆச்சரியமே சிங்கமும் மனிதர்களும் இங்கு ஒன்றாக வாழ்கின்றனர் என்பது தான்.

அதாவது நமது கிராமங்களில் ஆடுகள் , மாடுகள் போன்ற வீட்டு விலங்குகள் எப்படி நாம் கடந்து செல்கின்றோமோ அதே போல இவர்கள் சிங்கங்களை கடந்து செல்கின்றனர். சிங்கங்களும் கிராம மக்களுக்கு எந்த தொல்லையும் கொடுப்பது இல்லை என கூறப்படுகிறது.

இந்த கிராமத்தில் 500க்கு மேற்பட்ட சிங்கங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கிர் தேசிய பூங்கா சிங்கங்கள் மட்டுமல்லாது அழிந்து வரும் விலங்கு இனங்களுக்கு அடைக்கலம் தரும் இல்லமாக இருந்து வருகிறது.

Sassan Gir, the village of free roaming lions
நீலகிரி : பூனை என நினைத்து சிறுத்தை குட்டியைத் தூக்கி வந்த தொழிலாளர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com