நீலகிரி : பூனை என நினைத்து சிறுத்தை குட்டியைத் தூக்கி வந்த தொழிலாளர்கள்

தேயிலைத் தோட்டத்தில் கிடந்த சிறுத்தை குட்டியை பூனைக் குட்டி என நினைத்து தொழிலாளர்கள் கையில் தூக்கிச் சென்றதையடுத்து, வனத்துறையினர் அதனை மீட்டுள்ளனர்.
 leopard
leopardTwitter
Published on

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்திற்குத் தொழிலாளர்கள் வழக்கம் போல பணிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே சத்தம் கேட்பதை அறித்த தொழிலாளர்கள், அங்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தை குட்டி ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பூனைக் குட்டி என நினைத்த தொழிலாளர்கள் கையில் தூக்கி எடுத்து வந்துள்ளனர்.

 leopard
அமெரிக்கா : ஒரு நாள் மேயராக பதவி வகித்த பூனை - எப்படி சாத்தியம் ?

பின்னர் அது பூனைக் குட்டி இல்லை சிறுத்தை குட்டி என அறிந்தததையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு ஏற்கெனவே அது கிடந்த அதே பகுதியில் விட்டுள்ளனர்.

அதற்கான காரணத்தையும் வனத்துறையினர் கூறியுள்ளனர். அதில் , தாய் சிறுத்தை உணவு தேடுவதற்காகக் குட்டியைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுச் சென்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அப்பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நிச்சயம் தாய் சிறுத்தை குட்டியை எடுத்துச் செல்லும் என நம்புகிறோம் என்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

 leopard
தொடர் மின்வெட்டு - தோனியின் மனைவி சாக்‌ஷி மாநில அரசுக்கு கேள்வி

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com