"இதனை யாருக்கும் காட்டாதே" - 8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்

8ம் வகுப்பு படிக்கு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
"இதனை யாருக்கு காட்டாதே" - 8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்
"இதனை யாருக்கு காட்டாதே" - 8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்Twitter
Published on

உத்தரபிரதேசம் மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள அரசு சார்பு பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படிக்கு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த ஆசிரியர் எழுதிய கடிதத்தை படித்தவுடன் கிழித்து விட வேண்டும் எனவும் எழுதியிருக்கிறார்.

அந்த குழந்தை சரியாக கடிதத்தை தன் பெற்றோருக்கு காண்பித்திருக்கிறது.

குழந்தையை துன்புறுத்தியதற்காக அந்த ஆசிரியர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை கூறுவதன் படி, காதல் கடிதம் குறித்து அந்த ஆசிரியர் குழந்தையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர் மறுத்துள்ளார். அது மட்டுமின்றி குழந்தையை இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

அவரது கடிதத்தில் விடுமுறை நாட்களில் உன்னை மிஸ் செய்வேன் என்றும், விடுமுறை வருவதற்குள் தன்னை வந்து சந்திக்குமாறும் அவர் கேட்டிருந்தார்.

"இதனை யாருக்கு காட்டாதே" - 8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்
ஆணுறை, சிகரெட், ஆல்கஹால் - அதிரடி சோதனையில் சிக்கிய பள்ளி மாணவர்கள் - எங்கே?

மேலும், இதனை படித்ததும் கிழித்து விட வேண்டும் என்றும் யாருக்கும் காட்டக் கூடாது என்றும் அந்த ஆசிரியர் எழுதியிருந்தார்.

இந்த கடிதம் குறித்து முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் குன்வார் அனுபம் சிங்க் கூறியிருந்தார்.

மாவட்ட கல்வி அலுவலர்களும் 47 வயது ஆசிரியருக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கின்றனர்.

"இதனை யாருக்கு காட்டாதே" - 8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்
இஸ்லாம் : 'தீவிரவாதி எனக் கூறிய ஆசிரியர்’ கேள்வியால் எதிர்க்கொண்ட மாணவன் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com