மத்தியபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி? முன்னிலை வகிக்கும் சிவராஜ் சிங் பற்றி 10 தகவல்!

மத்தியபிரதேசத்தில் பாஜக, ஆட்சியை தக்கவைக்கும் சூழலில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகானை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.
Shivraj Singh Chouhan : who is Leading candidate in MP
Shivraj Singh Chouhan : who is Leading candidate in MP Twitter
Published on

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்ந்து வருகின்றது. 230 இடங்கள் கொண்ட மத்திய பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்பட்டி பாஜக 155 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றது

மத்திய பிரதேசத்தின் முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக அந்த மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளராகவும் மாநில தலைவராகவும் இருந்துள்ளார்.

சிவராஜ் சிங் சவுகான் நவம்பர் 29 2005ஆம் ஆண்டு தான் மத்தியபிரதேசத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

மார்ச் மாதம் 5 ம் தேதி 1959 ஆம் ஆண்டு பிரேம் சிங் சவுகானுக்கும் சுந்தர் பாய் சவுகானுக்கும் மகனாக பிறந்த சிவராஜ்சிங் சவுகான், 1992ஆம் ஆண்டு சாதனா சிங் என்ற பெண்ணை மணந்தார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.

ராட்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் இருந்துதான் சிவராஜ்சிங் சவுகானின் அரசியல் பயணம் தொடங்கியது.

1972ஆம் ஆண்டு ராட்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் இணைந்தார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சியின் மத்தியப் பிரதேச மாநிலத் தலைவராக உருவானார் சிவராஜ்சிங் சவுகான் .

1991ஆம் ஆண்டு முதல் விதிசா மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பிறகு தான் பிறந்த மாவட்டமான சேகோரில் உள்ள புத்னி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு முதலமைச்சரானார். இந்த தொகுதியில் போட்டியிட்டு தற்போது இரண்டாவது முறையாக அமைச்சராக தொடர்கிறார் சிவராஜ் சிங் சவுகான்

Shivraj Singh Chouhan : who is Leading candidate in MP
Revanth Reddy : ABVP டு காங்கிரஸ் - ரேவந்த் ரெட்டி பற்றிய இந்த 5 விஷயங்கள் தெரியுமா?

இந்த முறை இவரது ஆட்சியின் போது இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு, பசு குண்டர்களால் ஏற்பட்ட வன்முறைகள் என சிவ்ராஜ் சிங் சவுகான் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் தற்போது மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 இடங்களில் 116 இடங்களில் யார் அதிக பெரும்பான்மையுடன் உள்ளார்களோ அவர்களுக்கே அரியணை சொந்தமாகும்.

தற்போது பாஜக 161 இடங்களிலும்,காங்கிரஸ் 66 இடங்களிலும் உள்ளது. எனவே மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Shivraj Singh Chouhan : who is Leading candidate in MP
Rajasthan : அரச பரம்பரையை சேர்ந்த வசுந்தரா ராஜே - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com