Revanth Reddy : ABVP டு காங்கிரஸ் - ரேவந்த் ரெட்டி பற்றிய இந்த 5 விஷயங்கள் தெரியுமா?

காங்கிரஸ் வெற்றிபெறும் பட்சத்தில் தெலுங்கானாவின் முதல் பிஆர்எஸ் கட்சியல்லாத முதல்வராகவும் இளம் முதல்வராகவும் திகழ்வார் ரேவந்த் ரெட்டி. அவர் கடந்துவந்த சுவாரஸ்யமான பாதை குறித்துப்பார்க்கலாம்.
Revanth Reddy : ABVP டு காங்கிரஸ்பற்றி இந்த 5 விஷயங்கள் தெரியுமா?
Revanth Reddy : ABVP டு காங்கிரஸ்பற்றி இந்த 5 விஷயங்கள் தெரியுமா?Twitter
Published on

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகின்றது.

காங்கிரஸ் வெற்றிபெறும் பட்சத்தில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்பார். 40 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட சந்திரசேகர ராவுக்கு கடுமையான போட்டியாக உருவெடுத்துள்ள ரேவந்த் ரெட்டியின் வயது 54 தான்.

தெலுங்கானாவின் முதல் பிஆர்எஸ் கட்சியல்லாத முதல்வராகவும் இளம் முதல்வராகவும் திகழ்வார் ரேவந்த் ரெட்டி. அவர் கடந்துவந்த சுவாரஸ்யமான பாதை குறித்துப்பார்க்கலாம்.

1. ரேவந்த் ரெட்டி ஹைதராபத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நுண்கலை பட்டம் பெற்றவர். படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் பயணித்தார்.

2. மூத்த அரசியல் தலைவர் ஜெய்பால் ரெட்டியின் உறவினரைக் காதலித்தார். பலத்த எதிர்ப்புக்கு பிறகு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தீவிர அரசியலில் இறங்கினார் ரேவந்த் ரெட்டி.

3. தெலுங்கானா ராஷ்டிர சமிதியில் 2004ம் ஆண்டு தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2006ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட ரேவந்த், ஜெகதீஸ்வர் ரெட்டி என்ற வலிமையான போட்டியாளரை எதிர்கொண்டார். வாக்காளர்களை குழப்பும் விதத்தில் அந்த பகுதியில் ஜெகதீஸ்வர் ரெட்டி என்ற பெயரில் இருந்த அனைவரையும் தேர்தலில் போட்டியிடவைத்தார். இறுதியில் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Revanth Reddy : ABVP டு காங்கிரஸ்பற்றி இந்த 5 விஷயங்கள் தெரியுமா?
பாரத் என்ற பெயர் மாற்றத்தை முன்பு எதிர்த்ததா பாஜக? விரிவான தகவல்

4. தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரேவந்த் ரெட்டிக்கு கடைசி நேரத்தில் கொடங்கல் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. 2009, 2014 என அடுத்தடுத்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார் ரேவந்த் ரெட்டி..

5. 2015ம் ஆண்டு வாக்குகளைப் பெற நியமன எம்.எல்.ஏவுக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இது அவரது அரசியல் பயணத்தில் சறுக்கலாக அமைந்தது.

2017ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த இவருக்கு 4 ஆண்டுகளில் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது பெருமளவில் விமர்சிக்கப்பட்டது. பி.ஆர்.எஸ் முதலமைச்சர் கே.ஐ.ஆருக்கு சரியான போட்டியாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் ரேவந்த் ரெட்டி.

Revanth Reddy : ABVP டு காங்கிரஸ்பற்றி இந்த 5 விஷயங்கள் தெரியுமா?
சாதிவாரி கணக்கெடுப்பு: காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு - ராகுல் செய்த தக்லைஃப் சம்பவம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com