மொய் பணம் வைக்கும்போது 1 ரூபாய் சேர்த்து கொடுப்பது ஏன் தெரியுமா?

100, 500, 1000 என்று மொய் பணம் வைக்காமல் அதனுடன் ஒரு ரூபாயையும் சேர்த்து வைப்பார்கள் அது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இவ்வாறு 1 ரூபாய் வைப்பதற்கு பல நம்பிக்கைகள் சொல்கிறார்கள். என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
மொய் பணம் வைக்கும்போது 1 ரூபாய் சேர்த்து கொடுப்பது ஏன் தெரியுமா?
மொய் பணம் வைக்கும்போது 1 ரூபாய் சேர்த்து கொடுப்பது ஏன் தெரியுமா? Twitter
Published on

இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு, இங்கு பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகளை பின்பற்றும் மக்கள் இருக்கின்றனர். அதில் ஒன்று தான், மொய் பணத்தில் 1 ரூபாய் சேர்த்து கொடுப்பது.

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு பாரம்பரியம் ஒரு ரூபாய் நாணயத்தை விஷேச வீட்டுகளில் மொய்பணத்துடன் சேர்த்து வைப்பது.

கல்யாணம், காது குத்து, கிரகப்பிரவேசம், மஞ்சள் நீராட்டு விழா, இப்படி எந்த சுப நிகழ்ச்சிகளின்போதும் மொய் செய்வது நம்முடைய முன்னோர்களின் பழக்கம். அது இன்று வரை தொடர்ந்து வருகிறது.

marriage
marriage Twitter

ஆனால் 100, 500, 1000 என்று மொய் பணம் வைக்காமல் அதனுடன் ஒரு ரூபாயையும் சேர்த்து வைப்பார்கள் அது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இவ்வாறு 1 ரூபாய் வைப்பதற்கு பல நம்பிக்கைகள் சொல்கிறார்கள். என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

அந்தக்காலத்தில் எல்லாம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் கிடையாது. பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் நாணயங்கள் வடிவத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தன.

இவைகளை கொண்டுதான் மொய்ப்பணம் வைத்திருக்கின்றனர். உலோகங்களை பரிசளிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. பெரியவர்கள் ரூபாய் நாணயத்தை அர்ச்சகர்களுக்கு தட்சிணையாக கொடுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

மொய் பணம் வைக்கும்போது 1 ரூபாய் சேர்த்து கொடுப்பது ஏன் தெரியுமா?
1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம் - எப்படி?

நாணயங்கள் உலோகங்களால் ஆனவை. முன்பு செம்பு மற்றும் வெள்ளி நாணயங்கள் பரவலாக இருந்தன, இப்போது எஃகு அடிப்படையிலான உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே,மொய்பணத்துடன் ஒரு ரூபாய் நாணயம் சேர்க்கப்படுகிறது.

உளவியல் கருத்தின்படி, பரிசுத் தொகையில் ஒரு ரூபாய் நாணயத்தைச் சேர்த்தவுடன், பெறுபவர் அதை ஒரு ரூபாய் நாணயத்துடன் 1 இல் தொடங்கி எண்ணுவார். ‘0’ என்பது முடிவைக் குறிக்கும் அதே வேளையில் ‘1’ ஆரம்பத்தைக் குறிக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது.

ஒரு ரூபாய் நாணயம் கடனாக கருதப்படுகிறது. கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவரும் மீண்டும் மீண்டும் சந்திப்பார்கள் என்பதே நம்பிக்கை.

அதற்காக அவர்களின் பிணைப்பு வலுவடைகிறது. 51, 101 அல்லது 501 என்று மொய் பணத்துடன் கூடுதலாக 1 ரூபாய் வைக்கும் போது 'மீண்டும் சந்திப்போம்' என்று சொல்லாமல் சொல்வதாகும்.

" 'போ'னு சொல்லாதீங்க 'போயிட்டு வரேன்'னு சொல்லுங்க " என்பார்களே அதே லாஜிக் தான்!

மொய் பணம் வைக்கும்போது 1 ரூபாய் சேர்த்து கொடுப்பது ஏன் தெரியுமா?
11 மாதங்களுக்கு மட்டும் வாடகை ஒப்பந்தம் செய்யப்படுவது ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com