மாணவியை கொலை செய்த நபர்: மரண தண்டனையை ஒளிபரப்ப நீதிமன்றம் அழைப்பு - எங்கே? என்ன நடந்தது?

ஒரு மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை ஒளிபரப்ப சட்ட ரீதியில் சில திருத்தங்களைக் கொண்டு வர எகிப்து நீதிமன்றம் அழைப்புவிடுத்துள்ளது.
Death Penalty
Death PenaltyTwitter
Published on

உலக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்குப் பல நாடுகளும் பல்வேறு விதமான காரணங்களைச் சொல்கின்றன. ஆனால் எவரும் ஒரு அழுத்தமான முடிவைக் கூறுவதில்லை. சமீபத்தில் எகிப்தில் ஒரு பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை உதாரணமாகக் கூறலாம்.

இப்போது ஒரு மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை ஒளிபரப்ப சட்ட ரீதியில் சில திருத்தங்களைக் கொண்டு வர எகிப்து நீதிமன்றம் அழைப்புவிடுத்துள்ளது.

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவிலிருந்து வடக்கில் சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில், மன்சூரா (Mansoura) நகரத்திலுள்ள பல்கலைக்கழகத்தின் வாயிலில் வைத்து மொஹம்மத் அடெல் (Mohammed Adel) என்கிற நபர் நயெரா அஷ்ரப் (Nayera Ashraf) என்கிற இளம்பெண்ணைக் கடந்த மாதம் குத்திக் கொலை செய்தார். இணையத்தில் வைரலான இந்த கொடூர காணொளியை எகிப்து நாட்டில் உள்ள பலரும் பார்த்து அச்சத்தில் உறைந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்த போது, 22 வயது மொஹம்மத் அடெலுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது அந்த நீதிமன்றம்.

Mohammed Adel
Mohammed AdelTwitter

மொஹம்மத் அடெனுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம், எகிப்து நாட்டு நாடாளுமன்றத்துக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளது. அதில், குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை நேரலையில் ஒளிபரப்ப அனுமதிக்குமாறும், அதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளது.

இப்படி மரண தண்டனைக்குத் தயார் செய்யப்படும் காணொளிகள், இப்படிப்பட்ட கொலைக் குற்றங்கள் நிகழாத வண்ணம் தடுக்க உதவும் என்றும் கூறியுள்ளது.

எகிப்து நாட்டில் கொலைக் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உலக அளவில் 2021ஆம் ஆண்டில் அதிக மரண தண்டனைகளை நிறைவேற்றிய மூன்றாவது நாடு எகிப்து என்கிறது ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் தரவுகள்.

Death Penalty
உக்ரைன் பெண்களை பயன்படுத்த ரஷ்ய வீரருக்கு அனுமதி வழங்கிய மனைவி - வெளியான ஆடியோ

இத்தனை தண்டனைகள் எகிப்து நாட்டில் நிறைவேற்றப்பட்டாலும், மரண தண்டனைகள் பொதுவெளியில் மக்களுக்கு ஒளிபரப்பப்படுவதில்லை.

கடந்த 1998ஆம் ஆண்டு, ஒரு பெண் மற்றும் அவரது இரு குழந்தைகளை கெய்ரோவில் அவரது வீட்டில் வைத்து கொலை செய்த மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது அரசு தொலைக்காட்சி சேனல் அதைப் பொதுமக்களுக்கு ஒளிபரப்புச் செய்தது.

கடந்த சில ஆண்டுகளாக எகிப்து நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களும், வன்முறைச் செயல்களும் அந்நாட்டு மக்கள் மத்தியில் பரவலான கோபத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது.

Death Penalty
‘நபிகள் கனவில் சொன்னார்’ - பாகிஸ்தானில் மாணவர்களால் கொல்லப்பட்ட ஆசிரியை

கடந்த ஜூன் மாதம் தொலைக்காட்சி பிரபலமான ஷைமா கமல் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் ஒரு பள்ளிச் சிறுமியின் படங்கள் இணையத்தில் வெளியானதால் அச்சிறுமி தற்கொலை செய்து கொண்டார். அவ்விவகாரத்தில் ஒரு பதின்பருவ இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

கிட்டத்தட்ட 80 லட்சம் எகிப்து நாட்டுப் பெண்கள், தங்களின் கூட்டாளிகள் அல்லது உறவினர்களால் அல்லது முன்பின் தெரியாதவர்களால் வன்முறைக்கு ஆளாவதாக ஐக்கிய நாடுகள் சபையின் 2015ஆம் ஆண்டு கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது.

Death Penalty
Free Body: இனி பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம்… ஜெர்மனியில் அறிவிப்பு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com