Morning News Today: 9 ஆண்டுகள் கழித்து சிந்தனை அமர்வு மாநாடு -புத்துயிர் பெறுமா காங்கிரஸ்?

‘ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்’ என்ற வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Sonia Gandhi
Sonia GandhiTwitter
Published on

9 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு - சோனியா காந்தி பங்கேற்பு

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ மாநாடு நாளை தொடங்குகிறது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. நாளை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 430 காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். மாநாட்டுக்காக ராகுல்காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இன்று மாலை டெல்லியிலிருந்து ரயில் மூலம் உதய்பூருக்குச் செல்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடக்க உரை ஆற்றுகிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காகக் கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் வியூகம் வகுக்கப்படுகிறது. ‘ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்’ என்ற வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இத்தகைய மாநாடு நடக்கிறது.

கொரோனா
கொரோனாTwitter

உலக நாடுகள் பங்கேற்கும் 2-வது கொரோனா உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

கொரோனாவின் நிலைமை குறித்து விவாதிக்க உலக நாடுகள் பங்கேற்கும் 2-வது கொரோனா உச்சி மாநாடு இன்று காணொளிக்காட்சி வழியாக நடக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். ‘தொற்று நோய் சோர்வைத் தடுத்தலும், தயார் நிலையில் முன்னுரிமை அளித்தலும்’ என்ற தலைப்பின்கீழ் நடைபெறுகிற அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். தொடக்க அமர்வு இன்று மாலை 6.30 மணி முதல் 7.45 மணி வரை நேரடியாக ஒளிபரப்பாகிறது.

ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் போன்ற முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடத்திய உலகளாவிய முதல் கொரோனா உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடிtwitter

நீட் தேர்வு முடிவுக்குப் பிறகே, என்ஜினீயரிங் கவுன்சிலிங்! - அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழக கட்டண வசூலிப்பு குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விளக்கமளித்திருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர், "அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகத் தகவல்கள் உலவுகின்றன. சான்றிதழைத் தொலைத்துவிட்டு அதைக் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மிகக் குறைவு. அந்த கட்டணத்தைத்தான் உயர்த்தி இருக்கின்றனர். அதை வேண்டாம் என்று துணை வேந்தரிடம் கூறியிருக்கிறோம். அதை அவர் ஏற்றுக்கொண்டு உடனே, ஆணை பிறப்பிப்பதாக கூறியிருக்கிறார். எனவே அந்த கட்டண உயர்வு இருக்காது. பழைய கட்டணமே வசூலிக்கப்படும். கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பில் காலியிடம் வருவதற்குக் காரணம், நீட் தேர்வுக்கு முன்பே என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தியதுதான். என்ஜினீயரிங் கல்விக்கு தேர்வானவர்கள் பலர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்விக்குச் சென்றுவிட்டனர். எனவே நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தவிருக்கிறோம். அதுபற்றி 17-ம் தேதி மாலையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளோம்." என்றார்.

Putin
PutinNewsSense

‘ஹிட்லரைவிட புதின் ஆபத்தானவர்’ - போலந்து பிரதமர் பாய்ச்சல்!

உக்ரைன்மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் புதின் பற்றி போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர், “புதின், ஹிட்லரும் அல்ல, ஸ்டாலினும் அல்ல. ஆனால் மிகவும் ஆபத்தானவர். உக்ரைன் தெருக்களில் அப்பாவி மக்களின் ரத்தத்தால் ஓடின.ஸ்டாலின் மற்றும் ஹிட்லரின் சபிக்கப்பட்ட சித்தாந்தங்கள் மீண்டும் திரும்புவதைக் குறிக்கிறது. 20-ம் நூற்றாண்டின் கம்யூனிசத்தையும், நாஜியிசத்தையும் புதின் உருவாக்குவதற்கு மேற்கத்திய நாடுகள் அனுமதித்துவிட்டன. கீவில் ரஷியா தாக்குதலை நிறுத்தாது என்பதால் நாம் நமது ஆன்மாவை, சுதந்திரத்தை, இறையாண்மையை இழப்போம்” எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

Sonia Gandhi
IPL -ல் இருந்து விலகும் ஜடேஜா - காரணம் என்ன?

ஐ.பி.எல் போட்டிகள் நிலவரம்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Sonia Gandhi
இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவுக்கான எச்சரிக்கை - PDP தலைவர் மெஹ்பூபா பேச்சு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com