அயோத்தி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அணில் வடிவ சிற்பம் - என்ன காரணம்?

15 அடி உயரம் கொண்ட கார்டன் ஸ்டீலால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அணி சிற்பத்தை அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் வைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அயோத்தி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அணில் வடிவ சிற்பம் - என்ன காரணம்?
அயோத்தி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அணில் வடிவ சிற்பம் - என்ன காரணம்?Twitter

அயோத்தி ரயில் நிலையத்தில் 15 அடி உயரம் கொண்ட அணில் வடிவ சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த 30ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்த நிலையில் அயோத்தி ரயில் நிலையத்தில் 15 அடி உயரம் கொண்ட அணில் வடிவ சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

வால்மீகி எழுதி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இலங்கைக்கு ராமர், அவரது சகோதரர்கள், ஹனுமன் மற்றும் ஏராளமான படைகள் போருக்கு புறப்பட்டு செல்வர்.

இதில் முக்கியமான விஷயம் இலங்கைக்கு பாலம் கட்டுவது. பிரம்மாண்ட பாறைகள், மரக்கட்டைகள், சிறிய கற்கள் உள்ளிட்டவற்றை கடலில் போட்டு பாலம் கட்டுவர். இதில் ராமருக்கு பலரும் உதவியாக இருந்தனர். அவர்களில் அணிலும் ஒன்றாக இருக்கும்.

இதனை எடுத்துக்காட்டும் விதமாக 15 அடி உயரம் கொண்ட கார்டன் ஸ்டீலால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அணி சிற்பத்தை அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் வைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதை பெங்களூருவை சேர்ந்த கல்யாண் எஸ்.ரத்தோர் என்ற கலைஞர் உருவாக்கியுள்ளார். தற்போது அணிலின் கட்டமைப்பு முழுமை பெற்றுவிட்டது.

அயோத்தி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அணில் வடிவ சிற்பம் - என்ன காரணம்?
ராமர் கோயில் திறப்பு: ‘ராம்' என்று பெயரிடப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகை - எங்கே தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com