பார்லே முதல் ஹாவல்ஸ் வரை - தெரிந்த பிராண்டுகளும் தெரியாத பின்னணியும் | Wow Facts

நமக்கு தெரிந்த பிராண்டுகளின் பெயரின் பின்னால் இருக்கும் தெரியாத அர்த்ததை சொல்லும் பதிவு தான் இது
பார்லே முதல் ஹாவல்ஸ் வரை - தெரிந்த பிராண்டுகளும் தெரியாத பின்னணியும் | Wow Facts
பார்லே முதல் ஹாவல்ஸ் வரை - தெரிந்த பிராண்டுகளும் தெரியாத பின்னணியும் | Wow Factscanva
Published on

நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் பிராண்டட் ஆக இருக்கவேண்டும் என ஆசைப்படுவோம். கையில் கட்டும் வாட்சு முதல், கூலர்ஸ், ஷூ, வீட்டு உபயோக பொருட்கள் வரை என அனைத்திலும் நாம் பெரிய பெயர்கள் கொண்ட பிராண்ட்டின் பொருள்களை வாங்கிக் குவிக்கிறோம். இது ஸ்டேட்டஸின் ஒரு அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது எனலாம்.

இது போல நாம் பயன்படுத்தும் பொருட்களில் இருக்கும் பிராண்டுகளின் பெயர்களை கவனித்திருக்கிறோமா? அதன் பெயரின் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன? யோசித்திருப்போம்! ஆனால் தெரியாமல் போயிருக்கலாம்.

அப்படி நமக்கு தெரிந்த பிராண்டுகளின் பெயரின் பின்னால் இருக்கும் தெரியாத அர்த்ததை சொல்லும் பதிவு தான் இது

ஜாக்வார்

ஜாக்வார் என்பது நம் வீட்டில் பயன்படுத்தும் பைப்புகள், டாய்லட்டரிகளை தயாரிக்கும் நிறுவனமாகும். இதன் ஆங்கில ஸ்பெல்லிங் ஆனது, பூனை இனத்தை சேர்ந்த காட்டு விலங்கான ஜாகுவாரை நினைவுப்படுத்தலாம்.

ஆனால் அதன் உண்மையான ஸ்பெல்லிங் jaquar. இது நிறுவனர்களின் பாட்டியான ஜெய் கௌர் என்பவரின் பெயரை சற்றே மாற்றி வைக்கப்பட்ட பெயராகும்.

பார்லே முதல் ஹாவல்ஸ் வரை - தெரிந்த பிராண்டுகளும் தெரியாத பின்னணியும் | Wow Facts
தக்காளி ketchup ஒரு காலத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டதா? - வாவ் தகவல்கள்

சிக்

இது 80, 90களில் மிகப் பிரபலமாக இருந்த ஷாம்பூ பிராண்டாகும். இந்த தொழிற்சின்னத்தின் பெயர் நிறுவனரின் தந்தையான சின்னி கிருஷ்ணன் என்பவரின் பெயரால் வந்தது

ஹாவெல்ஸ்

நொய்டாவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனமானது மின்விசிறி, மின்விளக்குகள் போன்ற மின்னனு சாதனங்களை தயாரிக்கிறது.

1958ல் ஹவேலி ராம் காந்தி என்பவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பின்னர் கீமத் ராய் குப்தா என்பவருக்கு விற்கப்பட்டது.

ஹாவெல்ஸ் என்ற பெயர் நிறுவனர் ஹவேலி ராம் காந்தியின் பெயரை சற்றே மாற்றி வைக்கப்பட்ட பெயராகும்

பார்லே முதல் ஹாவல்ஸ் வரை - தெரிந்த பிராண்டுகளும் தெரியாத பின்னணியும் | Wow Facts
முத்து நகரம் முதல் குட்டி ஜப்பான் வரை: இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள் - என்னென்ன?

பார்லே

இதுவும் 90களில் பிறந்தவர்களுக்கு மிகவும் நெருக்கமான பிராண்டாகும். பார்லே ஜி பிஸ்கட்கள் என்றால் இன்றும் நாக்கில் எச்சில் ஊறும். அதுவும் டீயுடன் பார்லே ஜி பிஸ்கட்கள் செம்ம டேஸ்ட்!

1929ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

இதனை சௌஹான் வம்சத்தினர் நிறுவினர். இவர்கள் மும்பையின் விலி பார்லே என்ற இடத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த நிறுவனத்திற்கு பார்லே என்ற பெயர் வந்துள்ளது

விக்கோ

விக்கோ டர்மரிக், இல்ல காஸ்மெட்டிக்... பாடல் நினைவிருக்கிறதா?

அந்த காலத்தில் பெண்களின் ஃபேவரெட் ஃபேஸ் கிரீம் ஆக திகழ்ந்தது விக்கோ. இதன் மணமே நம்மை சுண்டி இழுக்கும்.

இந்த பிராண்டில் பல்துலக்கும் பேஸ்ட், பல் பொடி உள்ளிட்ட பொருட்களும் இருக்கிறது.

இந்த விக்கோ என்ற வார்த்தையின் விரிவாக்கம் விஷ்ணு இண்டஸ்ட்ரியல் கெமிக்கல் கம்பனி என்பது தான்!

பார்லே முதல் ஹாவல்ஸ் வரை - தெரிந்த பிராண்டுகளும் தெரியாத பின்னணியும் | Wow Facts
மகாபலிபுரம் : ஏன் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்? - 7 Wow Facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com