அரசுத் தேர்வு ஹால் டிக்கெட்டில் சன்னி லியோனி; வைரல் சம்பவம் - நடந்தது என்ன?

"சட்ட மன்றத்திற்குள் இருந்து ஆபாசப்படம் பார்க்கும் கட்சியிடம் இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்" என எதிர்கட்சியான காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பி.எஸ் நாயுடு ட்விட்டரில் விமர்சித்திருந்தார்.
அரசுத் தேர்வு ஹால் டிக்கெடில் சன்னி லியோனி; வைரல் சம்பவம் - நடந்தது என்ன?
அரசுத் தேர்வு ஹால் டிக்கெடில் சன்னி லியோனி; வைரல் சம்பவம் - நடந்தது என்ன?Twitter

ஆசிரியர் ஆள்சேர்ப்பு தேர்வுக்கான ஹால் டிக்கெடில் நடிகை சன்னி லியோனியின் படம் இடம் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகா அரசு ஆசிரியர் ஆள்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த பெண் ஒருவர் தனக்கு வந்திருந்த ஹால் டிக்கெடில் முன்னாள் ஆபாசப்பட நடிகை சன்னி லியோனியின் புகைப்படம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்த ஸ்க்ரீன் ஷாட் இணையத்தில் வைரலானது. நெட்டிசன்கள் பகடி செய்தனர். சிலர் கர்நாடகா பாஜக அரசை விமர்சித்தனர்.

"சட்ட மன்றத்திற்குள் ஆபாசப்படம் பார்க்கும் கட்சியிடம் இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்" என எதிர்கட்சியான காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பி.எஸ் நாயுடு ட்விட்டரில் விமர்சித்திருந்தார்.

நாயுடுவின் விமர்சனத்துக்கு அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.

அரசுத் தேர்வு ஹால் டிக்கெடில் சன்னி லியோனி; வைரல் சம்பவம் - நடந்தது என்ன?
புர்கா சர்ச்சை - கர்நாடகா தேர்வுகள் : இரண்டாம் இடம் பெற்று அசத்திய இல்ஹாம்

"தேர்வுக்கு விண்ணப்பித்த பெண் தவறான புகைப்படத்தை சமர்பித்தது தான் இந்த பிழைக்கு காரணம். கணினி எந்த புகைப்படம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும். விசாரித்ததில் அந்த பெண் தனது கணவரின் நண்பர் மூலமாக விண்ணப்பித்ததும், அவர் தவறு செய்திருப்பதும் தெரிய வந்தது" எனக் கூறியிருக்கின்றனர்.

இது குறித்து புகார் அளிக்கப்படும் எனவும் கர்நாடக கல்வி அமைச்சக அதிகாரி கூறியுள்ளார்.

அரசுத் தேர்வு ஹால் டிக்கெடில் சன்னி லியோனி; வைரல் சம்பவம் - நடந்தது என்ன?
பகவத் கீதை மத நூல் கிடையாது - சர்ச்சை கிளப்பிய கர்நாடகா அமைச்சர் பி.சி. நாகேஷ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com