Swiggy: 12 மில்லியன் பிரியாணி, 2423 ஆணுறைகள்: IPL Finalsல் எகிறிய ஸ்விக்கி ஆர்டர்!
Swiggy: 12 மில்லியன் பிரியாணி, 2423 ஆணுறைகள்: IPL Finalsல் எகிறிய ஸ்விக்கி ஆர்டர்!Twitter

Swiggy: 12 மில்லியன் பிரியாணி, 2423 ஆணுறைகள்: IPL Finalsல் எகிறிய ஸ்விக்கி ஆர்டர்!

நேற்று நள்ளிரவு மேட்ச் நடந்த சமயத்தில் மட்டும் சுமார் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்களை பெற்றுள்ளது ஸ்விக்கி நிறுவனம்.

நேற்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போது ஸ்விக்கியில் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள் இடம்பெற்றுள்ளன. தவிர ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம், 2000த்துக்கும் மேற்பட்டோர் காண்டம் ஆர்டர் செய்துள்ளனர்.

இது குறித்து ஸ்விக்கி பதிவிட்டிருந்த ட்வீட்கள் வைரலாகி வருகிறது.

மழையின் காரணமாக தடைசெய்யப்பட்டு நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டி, மே 30 நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது.

மைதானத்தில் 75,000 பேர் அமர்ந்து போட்டியை கண்ட நிலையில், ஜியோ சினிமாவின் மூலம் சுமார் 3.2 கோடி பேர் போட்டியை கண்டுள்ளனர்.

பொதுவாகவே இது மாதிரியான டோர்னமெண்ட் சமயங்களில், ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற ஃபுட் டெலிவரி ஆப்களில் கண்கவர் ஆஃபர்கள் இருக்கும். அதற்கு இணையாக மக்கள் உணவுகளை ஆர்டரும் செய்வார்கள்.

கடந்த சில மாதங்களாகவே இந்தியர்களின் பிரியமான உணவாக பிரியாணி மாறிவிட்டது. சும்மாவே ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.

Swiggy: 12 மில்லியன் பிரியாணி, 2423 ஆணுறைகள்: IPL Finalsல் எகிறிய ஸ்விக்கி ஆர்டர்!
IPL 2023: ஐந்தாவது கோப்பையை கைப்பற்றிய CSK - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இந்நிலையில், நேற்று நள்ளிரவு மேட்ச் நடந்த சமயத்தில் மட்டும் சுமார் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்களை பெற்றுள்ளது ஸ்விக்கி நிறுவனம்.

இது குறித்து அவர்களி பதிவிட்ட ட்வீட்டில், “மிக அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவாக இந்த பருவத்தில் பிரியாணி கோப்பையை தட்டிச்செல்கிறது. ஒரு நிமிடத்துக்கு 212 பிரியாணிகள் வீதம், 12 மில்லியன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன” என்று இருந்தது.

தவிர, போட்டி சமயத்தில் அதிகமாக ஆணுறைகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் சேவையின் மூலம் 2423 பேர் ஆணுறை ஆர்டர் செய்துள்ளனர்

இந்த இரண்டு ட்வீட்களும் இணையத்தில் பெரும் கவனம் பெற்று வருகின்றன

Swiggy: 12 மில்லியன் பிரியாணி, 2423 ஆணுறைகள்: IPL Finalsல் எகிறிய ஸ்விக்கி ஆர்டர்!
Swiggy: பத்தே விநாடிகளில் டெலிவரி செய்யப்பட்ட ஆர்டர் - எங்கே? எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com