பெங்களூருவில், வெறும் 10 விநாடிகளில் ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இது தான் தற்போது மிகத் துரிதமான டெலிவரி ஆகும்.
நமக்கு எந்த நேரத்தில் ஃபுட் கிரேவிங்ஸ் ஏற்படும் என்று கணிக்க இயலாது. இப்போதெல்லாம், நினைத்த நேரத்தில் பிடித்த உணவை சாப்பிட, உணவு டெலிவரி ஆப்கள் கைக்கொடுக்கின்றன.
அப்படித்தான் கலேப் ஃப்ரெய்சன் என்ற இளைஞருக்கு நடுராத்திரியில் மெக்டோனால்ட் மீல் சாப்பிடவேண்டும் என்ற ஆசை தோன்றியுள்ளது.
இதனை தொடர்ந்து பெங்களூருவில் வசிக்கும் கலேப், கோரமங்கலாவிலுள்ள மெக்டோனால்ட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஆர்டர் செய்ய சென்றபோது, உணவகத்தை அவர்கள் மூடிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், அருகில் உணவு டெலிவரி ஆட்கள் டெலிவரிக்காக உணவை வாங்க காத்திருப்பதை அவர் கவனித்துள்ளார்.
அப்போது அவருக்கு ஐடியா ஒன்று தோன்றியுள்ளது. துரிதமாக யோசித்து, மெக்டோனால்ட் கோரமங்கலா பிரான்ச் முன்னர் நின்றுக்கொண்டே ஸ்விக்கியில் ஆர்டர் செய்துள்ளார்.
நிறுவனமும் ஆர்டரை ஏற்றுக்கொண்டது. ஆர்டர் செய்த வெறும் 10 விநாடிகளில் கலேபிற்கு அவரது உணவு டெலிவரி செய்யப்பட்டது. இது அனைத்தையும் கலேப் தனது மொபைலில் வீடியோ எடுத்து, ட்விட்டரில் முழுக்கதையை பகிர்ந்திருந்தார்.
கலேபின் உணவை டெலிவரி செய்த அந்த ஸ்விக்கி ஊழியர், மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். இது அவர் செய்த மிக விரைவான டெலிவரி மற்றும், டெலிவரிக்காக அவர் பயணித்த மிக குறுகிய தூரமாகும்.
இதுவரை வழங்கப்பட்டதிலேயே மிக ஃபாஸ்ட்டான டெலிவரி இது தான் என, இந்த வீடியோ இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust