விஷ்வா தீனதாயாளான், தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது டேபிள் டென்னிஸ் மேகாலயாவில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவுக்குத் தமிழக முதல்வர், மேகாலயா முதல்வர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
சென்னை லயோலா கல்லூரியில் B.com படித்து வரும் மாணவர் விஷ்வா தீனதயாளன். சர்வதேச போட்டிகளில் விளையாடிய டேபிள் டென்னிஸ் வீரரான இவர், ஷில்லாங்கில் இன்று தொடங்கும் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கௌஹாத்தியில் இருந்து சக போட்டியாளர்களுடன் காரில் சென்றுள்ளார்.
ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகிய தமிழக வீரர்களும் விஷ்வாவுடன் பயணித்தனர். கார் ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த 12 சக்கர கனரக வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த டிவைடரை தாண்டி வந்து காரில் மோதியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களுள் செல்லும் வழியிலேயே விஷ்வா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்ற வீரர்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஏப்ரல் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பாக விளையாட விஷ்வா தேர்வாகியிருந்தது குறிப்பிடதக்கது. விஷ்வாவின் உடல் விமானத்தின் மூலம் சென்னை கொண்டுவரப்பட இருக்கிறது. விஷ்வானின் மரணத்துக்கு மேகாலயா முதல்வர் கான்ரட் சங்மா, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com