"Alexa, Bark": How UP Teen Saved Herself, Toddler From Monkey Attack
வீட்டுக்குள் நுழைந்த குரங்குகள்; டெக்னாலஜியால் கைக்குழந்தையை காப்பாற்றிய சிறுமி!Canva

வீட்டுக்குள் நுழைந்த குரங்குகள்; டெக்னாலஜியால் கைக்குழந்தையை காப்பாற்றிய சிறுமி!

தன்னையும் தனது அக்கா மகளான கைக்குழந்தையும் குரங்குகள் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள துரிதமாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் நிகிதா என்ற சிறுமி.
Published on

உத்தரபிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது பெண்ணின் விவேகமன செயல் நாடுமுழுவதும் பேசப்பட்டு வருகிறது.

தன்னையும் தனது அக்கா மகளான கைக்குழந்தையும் குரங்குகள் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள துரிதமாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் நிகிதா என்ற சிறுமி.

ஒரு வயதான குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த நிகிதா, குரங்குகள் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

சமையலறையில் பாத்திரங்களைத் தூக்கி எறிந்த குரங்குகள், நிகிதாவையும் கைக்குழந்தையையும் தாக்க முயன்றுள்ளன.

செய்வதறியாது திகைத்த நிகிதா குளிர்சாதனப் பெட்டியின் மேல் இருந்த அலெக்ஸா ஸ்பீக்கரை நாய் போல குரைக்கும் படி கட்டளையிட்டுள்ளார்.

ஸ்பீக்கரில் குரைக்கும் சத்தத்தைக் கேட்ட குரங்குகள் நாய் இருப்பதாக பயந்து வீட்டைவிட்டு உடனடியாக வெளியேறின.

நிகிதாவின் செயலை பார்த்து பெருமையடைந்த உறவினர்கள், அலெக்ஸாவை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா என ஆச்சரியப்பட்டுள்ளனர்.

"Alexa, Bark": How UP Teen Saved Herself, Toddler From Monkey Attack
ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் செலவு; 10 வயதில் 50 நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட சிறுமி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com