ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் செலவு; 10 வயதில் 50 நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட சிறுமி!

ஆஃபீஸ், கல்லூரி என பல கமிட்மெண்ட் இருக்கும் ஆனால் இங்கு ஒரு 10 வயது சிறுமி பள்ளியையும் தவறவிடாமல் 50 நாடுகளுக்குச் சென்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிதி திரிபாதி 10 வயதுக்கு முன்பே சுமார் 50 நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
10-Year-Old Indian-Origin Girl Visits 50 Countries Without Missing School
10-Year-Old Indian-Origin Girl Visits 50 Countries Without Missing SchoolTwitter

பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்வதும், பல்வேறு கலாச்சாரங்களை ஆராய்வதும் நம்மில் பலருக்கு பிடித்தமான ஒன்றாகிவிட்டது. பல ஊர்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்று பக்கெட் லிஸ்ட் எல்லாம் இருக்கும்.

அதற்கான நேரத்தை ஒதுக்குவது மிகவும் சவாலானதாக இருக்கும். ஆஃபீஸ், கல்லூரி என பல கமிட்மெண்ட் இருக்கும் ஆனால் இங்கு ஒரு 10 வயது சிறுமி பள்ளியையும் தவறவிடாமல் 50 நாடுகளுக்குச் சென்றுள்ளார்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிதி திரிபாதி 10 வயதுக்கு முன்பே சுமார் 50 நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

அவரது பெற்றோர் தீபக் மற்றும் அவிலாஷா திரிபாதி ஒரு நாள் கூட பள்ளியைத் தவறவிடாமல், அதிதி உலகத்தை சுற்றி வருவதை உறுதிசெய்துள்ளனர்.

கோடை விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் பயணம் செய்வதை உறுதி செய்தனர். இருவரும் ஆண்டுக்கு சுமார் ரூ. 21 லட்சம் செலவில் அதிதியை 50 நாடுகளுக்கு மேல் அழைத்துச் சென்றுள்ளனர். அனுபவம் ஒவ்வொரு பைசாவிற்கும் மதிப்புள்ளது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அதிதியின் முதல் பயணம் ஜெர்மனிக்கு அதுவும் 3 வயதில்! பயணத்தின் மீதான அவளது காதலால் ஈர்க்கப்பட்டு, அவளுடைய பெற்றோர் அவளை பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் இத்தாலிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

இந்தோனேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளுடன், ஐரோப்பா முழுவதும் அதிதி சென்று வந்துள்ளார். அதிதியும் அவரது பெற்றோரும் இங்கிலாந்தில் உள்ள பென் நெவிஸ், ஸ்கேஃபெல் பைக் மற்றும் ஸ்னோடன் ஆகிய மூன்று உயரமான மலைகளிலும் ஏறியுள்ளனர்.

10-Year-Old Indian-Origin Girl Visits 50 Countries Without Missing School
வேலையே இல்லாமல் லட்சங்களில் சம்பளம் - உலகெங்கிலும் அப்படி இருக்கும் வேலை பற்றி தெரியுமா?

அதிதியின் தந்தை தீபக் திரிபாதி மிரரிடம் கூறும்போது,

"அவள் புதிய கலாச்சாரங்களை ஆராய ஆர்வமாக இருக்கிறாள், மகிழ்ச்சியும் அடைகிறாள். அவளின் மூன்று வயதிலிருந்தே பயணம் செய்ய ஆரம்பித்தோம்.

நாங்கள் சில சமயம் திங்கட்கிழமை காலை பயணம் மேற்கொண்ட பின்னர் சொந்த ஊருக்கு வருவோம். அவள் விமான நிலையத்திலிருந்து நேராக பள்ளிக்குச் சென்றுவிடுவாள். பயணம் அவளுக்கு அதிக நண்பர்களை உருவாக்க உதவியது என்றார்.

10-Year-Old Indian-Origin Girl Visits 50 Countries Without Missing School
சொந்த பெற்றொரிடம் ”மகள் வேலை” : மாதம் 47,000 ரூபாய் சம்பாதிக்கும் இளம்பெண் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com