தெலுங்கானா: சார்மினார் முதல் ஷில்பரமம் வரை - ஹைதராபாத்தில் இருக்கும் அற்புத தலங்கள்

தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்
தெலுங்கானா: சார்மினார் முதல் ஷில்பரமம் வரை - ஹைதராபாத்தில் இருக்கும் அற்புத தலங்கள்
தெலுங்கானா: சார்மினார் முதல் ஷில்பரமம் வரை - ஹைதராபாத்தில் இருக்கும் அற்புத தலங்கள்Twitter

இந்திய மாநிலங்களில் கலாச்சார சிறப்பு வாய்ந்தது தெலுங்கானா. குறிப்பாக ஹைதராபாத் நகரம் இந்திய வரலாற்றின் முக்கியப்பக்கங்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது.

சார்மினார்

ஹைதராபாத்தின் தனித்துவமான நினைவுச் சின்னம் சார்மினார். 1591ம் ஆண்டு இது கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பள்ளிவாசலும் இதைச் சுற்றியிருக்கும் லாத் மார்கெட்டும் பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருக்கும். ஹைதராபாத்தின் இதயம் இந்த பகுதிதான் எனலாம்.

கோல்கொண்டா கோட்டை

இந்த கோட்டையின் பிரம்மாண்டமான வடிவமைப்பு பயணிகளை ஈர்க்கிறது. இந்த கோட்டைக்கு சென்றால் நிற்காமல் இயங்கிக்கொண்டிருக்கும் ஹைதராபாத் நகரத்தை வெளியில் இருந்து அமைதியாக ரசிக்கலாம். கோல்கொண்டா வைரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பண்டைய இந்தியாவின் வைர தலைநகராக இருந்தது இந்த கோட்டை.

ராமோஜி ஃபிலிம் சிட்டி

சினிமாவில் ஆர்வம் உள்ள எவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் ராமோஜி ஃபிலிம் சிட்டி. உலகில் உள்ள மிகப் பெரிய ஸ்டோடியோக்களில் இதுவும் ஒன்று.

ஹுசைன் சாகர் ஏரி

செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஏரி ஹைதராபாத்தின் அழகான பகுதிகளில் ஒன்று. ஏரியின் நடுவில் இருக்கும் புத்தர் சிலை இந்த இடத்துக்கு அடையாளமாக இருக்கிறது. இது பிரபலமான தலமாக இருப்பதனால் சுற்றிப்பார்க்க அடிக்கடி மக்கள் வந்து செல்கின்றனர்.

தெலுங்கானா: சார்மினார் முதல் ஷில்பரமம் வரை - ஹைதராபாத்தில் இருக்கும் அற்புத தலங்கள்
Tawang: இமயத்தின் மடியில் இருக்கும் இந்தியாவின் மிக பெரிய புத்த மடாலயம் - என்ன சிறப்பு?

ஃபலாக்னுமா அரண்மனை

இப்போது சொகுசு விடுதியாக இருக்கும் இந்த அரண்மனை அதன் பிரம்மாண்டமான வடிவமைப்புக்காக பெயர்பெற்றது. இந்த அரண்மனையில் தங்க அதிக பணம் செலவாகும் என்றாலும் இது சிறந்த அனுபவமாக இருக்கும்.

சலார் ஜுங் மியூசியம்

எல்லா ஊரிலும் மியூசியங்கள் இருக்கின்றன. ஆனால் உலகிலேயே அதிக கலை மற்றும் தொன்மையான பொருட்களை கொண்டிருக்கும் இந்த அருங்காட்சியகம் தனித்துவமானது. பாரம்பரிய துணிகள், ஓவியங்கள், சிற்பங்கள் என பல பொருட்களை இங்கு காணலாம்.

தெலுங்கானா: சார்மினார் முதல் ஷில்பரமம் வரை - ஹைதராபாத்தில் இருக்கும் அற்புத தலங்கள்
சிங்கப்பூர் முதல் மாலத்தீவுகள் வரை - இதுவரை பனியைப் பார்த்திராத இடங்கள் பற்றி தெரியுமா?

ஷில்பரமம்

கலை மற்றும் கலைஞர்களுக்கான ஒரு கிராமம் ஷில்பரமம். இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பாரம்பரிய கலைகளின் வெளிப்பாட்டை இந்த கிராமத்தில் காணலாம். கலை ரசிகர்களுக்காகவும் கலை மாணவர்களுக்காகவும் இங்கு பல நிகழ்வுகள் நடத்தப்படுவதுண்டு.

நேரு வனவிலங்கு பூங்கா

நீங்கள் விலங்குகள் மீது ஆர்வம் உடையவராக இருந்தால் நிச்சயம் குடும்பமாக இங்கு சென்றுவரலாம்.

தெலுங்கானா: சார்மினார் முதல் ஷில்பரமம் வரை - ஹைதராபாத்தில் இருக்கும் அற்புத தலங்கள்
சென்னை முதல் கொல்கத்தா வரை: Street Foods சாப்பிட சிறந்த நகரம் எது?

பிர்லா கோவில்

வெள்ளை பளிங்குகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோவில் பார்வைக்கு அழகானது மட்டுமல்லாமல், மலை மீது அமைந்திருப்பதனால் ஹைதராபாத்தின் அழகிய காட்சியையும் வழங்குகிறது.

இரவில் இந்த கோவில் கூடுதல் அழகுடன் ஈர்க்கும்.

இவைத்தவிர ஹைதராபாத்தில் இருக்கும் பெரிய மசூதியான மெக்கா மஸ்ஜித், சௌமஹல்லா அரண்மனை, qutb shahi tombs என பல ஆச்சரியமளிக்கும் இடங்களையும் பார்க்கலாம்.

தெலுங்கானா: சார்மினார் முதல் ஷில்பரமம் வரை - ஹைதராபாத்தில் இருக்கும் அற்புத தலங்கள்
வரலாற்றில் இன்று : தெலுங்கானா உருவான நாள் - இந்த நாளில் என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com