வரலாற்றில் இன்று : தெலுங்கானா உருவான நாள் - இந்த நாளில் என்ன நடந்தது?

வரலாற்றில் இன்று, அதாவது ஜூன் 2 , பின்வரும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்துள்ளன. என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
2 June What Happened On This Day In History
2 June What Happened On This Day In HistoryTwitter
Published on

ஒவ்வொரு ஆண்டின் குறிப்பிட்ட நாளில் முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் பல நடந்திருக்கும். வரலாறு நமது கடந்த காலத்தை மீண்டும் உயிர்ப்பிக்க உதவியாக உள்ளது.

வரலாற்றில் இன்று, அதாவது ஜூன் 2 , பின்வரும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்துள்ளன. என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

தெலுங்கானா உருவான நாள்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் உருவானதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2 ஆம் தேதி தெலுங்கானா உருவான நாள் கொண்டாடப்படுகிறது.

தெலுங்கானா இந்தியாவின் 29வது மாநிலமாகும். இது ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜூன் 2, 2014 அன்று அதிகாரப்பூர்வமாக தனி மாநிலமாக உருவானது.

அமெரிக்க இந்திய குடியுரிமை தினம்

அமெரிக்க இந்திய குடியுரிமை தினம் ஜூன் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1924 ஆம் ஆண்டு இதே நாளில்தான் காங்கிரஸின் இந்திய குடியுரிமைச் சட்டம், அமெரிக்காவில் பிறந்த அனைத்து அமெரிக்க இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கியது.

இந்த நாள் அமெரிக்க இந்திய பழங்குடியினரின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடுகிறது.

2 June What Happened On This Day In History
ஜப்பான் முயல்தீவு: இங்கே ஆயிரக்கணக்கான முயல்கள் குவிந்தது எப்படி? - ஓர் இருண்ட வரலாறு

பூட்டான் ஒளிபரப்பு சேவை தொடங்கியது

பூட்டான் ஒளிபரப்பு சேவை ( Bhutan Broadcasting Service) ஜூன் 2, 1999 அன்று தொடங்கப்பட்டது.

சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம்

சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 2 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

2 June What Happened On This Day In History
சீனா : சிட்டுக்குருவிகளை கொல்ல ஆணையிட்ட மாவோ, ஏன் தெரியுமா? - நடுங்க வைக்கும் வரலாறு

வயர்லெஸ் டெலிகிராஃபிக்கான முதல் காப்புரிமை

ஜூன் 2 அன்று, வயர்லெஸ் கண்டுபிடிப்புக்கான தனது முதல் காப்புரிமை விண்ணப்பத்தை மார்கோனி தாக்கல் செய்தார்.

முடிசூட்டு விழா

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழா 1953 ஆம் ஆண்டு இதே நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்றது.

2 June What Happened On This Day In History
விக்டோரியா மகாராணியின் இந்திய காதல்? யார் இந்த அப்துல் கரீம் - ரகசிய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com