ரகசிய பாதை கொண்ட 1,300 ஆண்டுகள் பழமையான மசூதி பற்றி தெரியுமா?

இந்த மசூதியானது 4,200 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இரண்டு மாடி மாளிகையாகும். இதன் உட்பகுதி அகம்பள்ளி மற்றும் புறம்பள்ளி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மிகவும் வெப்பமான காலநிலையிலும் கூட உள்ளே குளிர்ச்சியாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Thazhathangadi Juma Masjid
Thazhathangadi Juma MasjidTwitter

கேரளாவின் கோட்டயம் நகரத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள தாழத்தங்கடியில் அமைந்துள்ள ஜும்ஆ மஸ்ஜித் இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றாகும்.

கோட்டயம்-குமரகம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இது சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானது என்றும், அதன் கட்டிடக்கலை அழகுக்காகவே மதிப்பிடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

மசூதிக்கு அருகில் ஒரு தேவாலயமும் ஒரு கோவிலும் உள்ளது. இஸ்லாமிய மிஷனரி நடவடிக்கைகளுக்காக கேரளாவிற்கு தனது தோழர்களுடன் வந்த மாலிக் பின் தினார் என்பவரால் இந்த தேவாலயம் நிறுவப்பட்டது என்று மஸ்ஜித் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த மசூதியானது 4,200 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இரண்டு மாடி மாளிகையாகும். இதன் உட்பகுதி அகம்பள்ளி மற்றும் புறம்பள்ளி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மிகவும் வெப்பமான காலநிலையிலும் கூட உள்ளே குளிர்ச்சியாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மசூதியின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் 'முக்குட்டி சாக்ஷா' ஆகும். இது பிரார்த்தனை மண்டபத்தின் கதவில் மூன்று தாழ்ப்பாள்களைக் கொண்ட ஒரு தனித்துவமான பூட்டு அமைப்பு ஆகும்.

மசூதிக்கு இரட்டை சுவர்கள் உள்ளன. அவற்றுக்கிடையே ஒரு நபர் நடந்து செல்லக்கூடிய ஒரு ரகசிய பாதையும் உள்ளது. இந்தப் பாதையானது அருகிலுள்ள மீனச்சிலை ஆற்றுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

புனித ரம்ஜான் மாதம் தவிர மசூதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Thazhathangadi Juma Masjid
சபரிமலை யாத்திரை : இனமென பிரிந்தது போதும்! சர்ச்,மசூதி செல்லும் ஐயப்பன் பக்தர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com