இரண்டாம் உலகப்போருக்கும் ரவா இட்லிக்கும் என்ன தொடர்பு? ஒரு சுவாரஸ்ய வரலாறு!

இன்று தென்னிந்தியர்களின் உணவில் பிரதான இடம்பிடித்திருக்கும் இட்லி வகையான ரவா இட்லியின் வரலாறு தெரியுமா? இதற்கும் இரண்டாம் உலகப்போருக்கும் என்ன சம்பந்தம்? இந்த பதிவில்...
இரண்டாம் உலகப்போருக்கும் ரவா இட்லிக்கும் என்ன தொடர்பு? ஒரு சுவாரச்ய வரலாறு!
இரண்டாம் உலகப்போருக்கும் ரவா இட்லிக்கும் என்ன தொடர்பு? ஒரு சுவாரச்ய வரலாறு!canva
Published on

இந்தியா அதன் உணவு வகைகளுக்காக பெயர் பெற்றது. குறிப்பாக இட்லி, தோசை, உப்புமா போன்ற உணவுகளுக்காக. தென்னிந்தியாவில் நாம் பெரும்பாலும் உட்கொள்வது அரிசி சார்ந்த உணவுகளை தான்.

நாம் அரிசியை அரைத்து மாவாக மாற்றி சமைக்கிறோம் என்பது தெரியும். இந்த இட்லியை, மினி இட்லி, சாம்பார் இட்லி, நெய் பொடி இட்லி என்று பல வெரைட்டிகளில் நாம் சாப்பிடுகிறோம்.

காலை, மாலை, இரவு என்று எந்த நேரத்திலும் நம் வீடுகளில் இட்லி அல்லது தோசை உணவாக பரிமாறப்படும்.

இவை எல்லாவற்றுடன், நாம் ரவா இட்லியையும் சாப்பிடுவோம். அரிசி மாவில் செய்யப்படும் இட்லியை போல அல்லாமல், இதனை நாம் குறைந்த நேரத்தில் இன்ஸ்டண்ட்டாக செய்துவிடலாம். செய்முறையும் ஈசி தான்.

இந்த ரவா இட்லி உருவான கதை தெரியுமா?

எம் டி ஆரின் பங்கு

இந்த ரவா இட்லியை, கண்டுபிடித்தவர்கள், பிரபல உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான எம் டி ஆர்.

MTR என்று அழைக்கப்படும் மாவல்லி டிபன் ரூம் என்பது 1924ஆம் ஆண்டு பரம்பள்ளி யக்ஞநாரயணா மையா மற்றும் அவரது சகோதரர்களால் தொடங்கப்பட்டது.

இன்று பெங்களூருவின் பிரபல காலை உணவாக ரவா இட்லியை மாற்றியதற்கு இவர்களுக்கு முக்கிய பங்குண்டு. இது இரண்டாம் உலகப்போரின் போது எம் டி ஆர் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட உணவு வகையாகும்.

அரிசி தட்டுப்பாடு

பர்மா உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இருந்தது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான் படைகள் பர்மாவை படையெடுத்து தாக்கினர்.

அரிசியை பிரதான உணவு வகையாக உட்கொள்ளும் தென்னிந்திய பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனுடன் சேர்த்து அரிசியின் விலையும் உயர்ந்தது. இதனால் அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. எம் டி ஆரின் வணிகமும் பாதிக்கப்பட்டது

எனவே அரிசி இல்லாமல் இட்லியை தயாரிக்க முடியுமா என்று முயற்சி செய்து பார்த்ததில் தான் இந்த ரவா இட்லி உருவானது. அரிசிக்கு பதிலாக ரவையை வைத்து மாவு தயாரித்து இட்லி சமைக்கப்பட்டது.

தி இந்து பத்திரிகைக்கு எம்டிஆரின் மேனேஜிங் பார்ட்னர் விகரம் மையா அளித்த பேட்டியில், தனது மாமா யக்ஞநாரயணா மையா தான் இதனை கண்டுபிடித்தவர் என்றும் தெரிவித்திருந்தார்

இரண்டாம் உலகப்போருக்கும் ரவா இட்லிக்கும் என்ன தொடர்பு? ஒரு சுவாரச்ய வரலாறு!
Biryani : 'ஈரான் டூ இந்தியா' பிரியாணி கடந்து வந்த பாதை - ஓர் ஆச்சரிய வரலாறு

ரவா இட்லி செய்வது எப்படி?

வெள்ளை ரவையுடன், உப்பு, தயிர், மிளகாய், கேரட், முந்திரி சேர்த்து கலந்து தாளித்து, வழக்கமாக இட்லி வேகவைப்பது போல ஸ்டீம் குக் செய்தால் ரவா இட்லி தயார். இதனை எந்த நேரத்திலும் நாம் உணவாக உட்கொள்ளலாம்.

அரிசி மாவு இட்லி தயாரிப்பதை விட இதனை வேகமாகவும் குறைந்த சமைத்திலும் செய்துவிடலாம்!

இரண்டாம் உலகப்போருக்கும் ரவா இட்லிக்கும் என்ன தொடர்பு? ஒரு சுவாரச்ய வரலாறு!
இந்தியாவின் ஃபேம்ஸ் ஸ்வீட் மைசூர் பாக் உருவான கதை தெரியுமா? ஒரு சுவாரஸ்ய வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com