இந்தியாவின் ஃபேம்ஸ் ஸ்வீட் மைசூர் பாக் உருவான கதை தெரியுமா? ஒரு சுவாரஸ்ய வரலாறு!

சமீபத்தில் உலகின் டாப் 50 சுவையான சாலையோர உணவுகள் (Street Food) என்ன என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்திய ஸ்ட்ரீட் ஃபுட்கள் மூன்று இடம்பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று மைசூர் பாக். இப்படி உலக ஃபேமஸ் ஆக இருக்கும் மைசூர் பாக் உருவான கதை என்ன?
மைசூர் பாக்
மைசூர் பாக் canva
Published on

இந்தியா எப்படி அதன் பாரம்பரியத்துக்காக பரவலாக அறியப்படுகிறதோ, போற்றப்படுகிறதோ, அது போல தான் அதன் உணவு வகைகளுக்கும்.

நம் ஊரின் மசாலாக்களுக்கும் சரி, இனிப்புகளுக்கும் சரி. இந்தியாவின் ஃபேமஸ் ஆன இனிப்பு வகைகளுள், நமக்கு நினைவுக்கு வருவது குலாப் ஜாமுன், மைசூர் பாக் போன்றவை தான்.

மஞ்சள் நிறத்தில், சதுரமான வடிவில் இருக்கும் மைசூர் பாக் மிகவும் ரிச் ஆன ஸ்வீட். வாயில் போட்டவுடன் கரையும். நெய்யில் மிதக்கும் இதனை பார்த்தாலே சாப்பிடவேண்டும் என்ற ஆசை ஏற்படும். வெறும் மூன்றே பொருட்கள் இருந்தால் இதனை தயாரித்துவிடலாம். ஆனால் இதன் செய்முறை சற்றே சிக்கலானது.

சமீபத்தில் உலகின் டாப் 50 சுவையான சாலையோர உணவுகள் (Street Food) என்ன என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்திய ஸ்ட்ரீட் ஃபுட்கள் மூன்று இடம்பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று மைசூர் பாக். இப்படி உலக ஃபேமஸ் ஆக இருக்கும் மைசூர் பாக் உருவான கதை என்ன?

மைசூர் பாக்
மானசா கோபால் : உணவு டெலிவரி செய்ய 4 கண்டங்கள் கடந்து 30,000 கி.மீ பயணித்த பெண் - ஏன்?

மைசூர் பாக் உருவான கதை

அது 1935ஆம் ஆண்டு. கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டம் மகாராஜா கிருஷ்ணராஜ வாடையாரின் ஆட்சியில் இருந்தது. அப்போது மைசூரு, மைசூர் என்றே அழைக்கப்பெற்று வந்தது.

ஒரு நாள் மகாராஜாவின் அம்பா விலாஸ் அரண்மனை சமையல் அறையில் பெரும் பரபரப்பு. அரசக் குடும்பத்தினருக்கு அன்றைக்கான ராஜபோஜனம் சமைத்தாகிவிட்டது. ஆனால், அரசர் சாப்பிட்டு முடித்தவுடன் அவருக்கு வழங்க இனிப்பு வகை இல்லை. அதாவது டெசர்ட்.

வழக்கமாக செய்யும் இனிப்பு வகைகளை வழங்க அரச குடும்பத்தின் தலைமை சமையல்காரர் ககுசா மாடப்பாவுக்கு விருப்பம் இல்லை. புதிதாக ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறிது நேரம் யோசித்தவர், கையில் கிடைத்த கடலை மாவு, நெய், சர்க்கரை மூன்றையும் கலந்து சமைக்கத் தொடங்கினார். மூன்றும் ஒன்று கலந்து சிரப் (கூழ்) போன்ற ஒரு பதம் வந்தவுடன் அதனை தட்டில் ஊற்றினார்.

அரசர் கிருஷ்ணராஜ வாடையார் மதிய உணவை சாப்பிட்டு முடித்தார். அதன் பிறகு ககுசா மாடப்பா தான் செய்த இனிப்பை அரசருக்கு பரிமாறினார்.

அரசர் உணவை முடித்திருந்த சமயத்தில் கூழாக இருந்த அந்த இனிப்பு கெட்டிப்பட்டிருந்தது. வாயில் போட்டவுடன் அந்த இனிப்பு கரைந்துபோக, அதன் சுவையில் மெய் மறந்து போனார் அரசர். தன் சமையல்காரர் ககுசாவை அழைத்து இதன் பெயர் என்ன என்று கேட்டார்.

தனக்கு முதலில் தோன்றிய பெயரான, “மைசுர் பாக்கா” என்றார் மாடப்பா. கன்னடத்தில் பாக்கா என்றால், பாகு (வெல்லம் சர்க்கரை பாகு ) என்று பொருள்.

மைசூர் பாக்
இங்க கையால சாப்பிட்டா குத்தமா? உலக நாடுகளும் உணவு பழக்கங்களும் !

இன்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளிலும் சரி, திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் சரி மைசூர் பாக் ஒரு ஸ்டார் ஸ்வீட்.

கடலை மாவை வருத்து, அதில் சிறுக சிறு நெய் சேர்த்து கிளரி, தேவையான அளவு சர்க்கரை பாகை சேர்த்து செய்யப்படுவது இந்த மைசூர் பாக். இதில் ஏலக்காய், பாதாம், பிஸ்தா, குல்கந்து, குங்குமப் பூ போன்றவற்றை கூடுதல் சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம்.

மகாராஜா கிருஷ்ணராஜ வாடையார் ஒரு உணவுப் பிரியர். அவரது அம்பா விலாஸ் அரண்மனையில் ஐரோப்பா முதல் ஆசியா வரை, உலக கண்டங்களின் அனைத்து வகையான க்யுசீன்களும் இங்கு சமைக்கப்பட்டன.

அரசரின் மனம் கவர்ந்த இந்த இனிப்பு வகையை மக்களும் சுவைக்கவேண்டும் என்று நினைத்த மாடப்பா, அரண்மனைக்கு வெளியில் ஒரு இனிப்பு கடை தொடங்கி, அங்கு மைசூர் பாக்கை விற்றதாகவும் கதைகள் சொல்லுகின்றன.

தேசி கேந்திரா இனிப்பு கடை என்று பெயரிடப்பட்ட இது அசோகா ரோட்டில் முதலில் அமைக்கப்பட்டதாகவும், பின்னர் சாயாஜி ரோடில் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பின்னர் குரு ஸ்வீட் மார்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த மைசூர் பாக்கை சுவைக்க இங்கு மக்கள் கூடுகின்றனர்

மைசூர் பாக்
மைசூர் பாக்கு முதல் குல்ஃபி வரை: உலகின் மிக சுவையான சாலையோர இனிப்புகள் எவை தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com