Bruce Lee : தெரிந்த மனிதன் தெரியாத உண்மைகள்- ஓர் உத்வேக கதை!

ப்ரூஸ் லீ தனது இரண்டாவது பள்ளியைத் தொடங்கியது ஆசிய தாற்காப்பு கலை மாஸ்டர்களை உறுத்தியது. சீனாவுக்கு சொந்தமான தற்காப்பு கலை ரகசியங்களை அவர் கசியவிடுவதாக குற்றம் சுமத்தினர். அவர்கள் ப்ரூஸ் லீக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரைக் கொல்ல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
Bruce Lee : ஆசியாவையும் அமெரிக்காவையும் இணைத்த நாயகன் - ஓர் உத்வேக கதை!
Bruce Lee : ஆசியாவையும் அமெரிக்காவையும் இணைத்த நாயகன் - ஓர் உத்வேக கதை!ப்ரூஸ் லீ

ஹாலிவுட்டின் ஒவ்வொரு பருவத்திலும் பல ஹீரோக்கள் உருவாகின்றனர். பலருக்கும் உலக அளவில் ரசிகர் பட்டாளம் உருவாகும். அங்கீகாரம் கிடைக்கும்.

ஆனால் ஹாலிவுட்டைத் தாண்டி நிஜ வாழ்விலும் ஹீரோவாக பார்க்கப்பட்ட ஒருவர் தான் ப்ரூஸ்லீ.

ஆசிய முக அமைப்பு உடையவராக இருந்தாலும் ஹாலிவுட்டில் நுழைந்த சில ஆண்டுகளிலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தவர் ப்ரூஸ் லீ.

நடிப்புத் திறமையை விட அவரது சண்டை செய்யும் முறைக்கும் அதற்கு பின்னிருக்கும் கடின உழைப்புக்கும் தீவிர ரசிகர்கள் இருந்தனர்.

One Year of Newssensetn
One Year of Newssensetn

யார் இந்த ப்ரூஸ்லீ :

Lee Jun-fan என்பது தான் ப்ரூஸ் லீயின் நிஜப்பெயர்.

நவம்பர் 27ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சைனா டவுனில் பிறந்தார்.

ப்ரூஸ் லீயின் தந்தை லீ ஹோய்-சூன் மற்றும் தாய் கிரேஸ் ஹோ இருவருமே சீனர்கள்.

லீ ஹோய்-சூன் ஒரு பாடகராகவும் நடிகராகவும் இருந்ததால் சிறு வயதிலேயே சினிமா ஷூடிங்களைப் பார்த்து வளர்ந்தார் ப்ரூஸ் லீ.

இதனால் ப்ரூஸ் லீயை சினிமா வாய்ப்பு தானாக முன் வந்து அழைத்துக்கொண்டது.

குழந்தை நட்சத்திரம் ப்ரூஸ் லீ
குழந்தை நட்சத்திரம் ப்ரூஸ் லீ

குழந்தை நட்சத்திரம்

ப்ரூஸ் லீ பிறந்த 3 மாதத்திலேயே திரையில் தோன்றினார். கைக்குழந்தை பாத்திரத்தில் தொடங்கியது அவரது திரை வாழ்க்கை.

நடிக்கவும் நடனமாடவும் சிறுவயதிலேயே கற்றிருந்தார் ப்ரூஸ் லீ.

குழந்தை நட்சத்திரமாக 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ப்ரூஸ் லீ.

ஆனால் தொடர்ந்து அமெரிக்காவிலேயே இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரது குடும்பம் சில காரணங்களால் ஹாங் காங்குக்கு குடிபெயர்ந்தது.

அந்த காலத்தில் ஹாங் காங்கில் கொஞ்சமும் அமைதி நிலவவில்லை. ஹாங் காங்க் முழுவதும் மாஃபியா கும்பல்களால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது.

முதல் திருப்புமுனை

ஹாங் காங்கில் ஒரு நாள் பள்ளிக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த ப்ரூஸ் லீயை ஒரு மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்கினர்.

இதனால் அவர்களுடன் ப்ரூஸ் லீக்கு பகை உருவானது.

ஹாங் காங் முழுவதும் பரவியிருக்கும் இது போன்ற கும்பல்களைக் கண்டு பயப்படக் கூடாது என நினைத்தார் ப்ரூஸ் லீ.

அதற்காக தற்காப்பு கலைகளை பயிற்சி செய்யத் தொடங்கினார்.

Yip Man and Bruce Lee
Yip Man and Bruce Lee

யிப் மேன் (yip man) என்ற புகழ் பெற்ற கிராண்ட் மாஸ்டரிடம் இருந்து குங்ஃபூ கலையை கற்றுக்கொண்டார்.

இதன் பிறகு அவரைத் தாக்கிய கும்பலுடன் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

இந்த முறை அந்த கும்பல் லீயிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டது.

சண்டையில் ஒருவரின் கை உடைந்தது. மற்றொருவனின் பல் தெரித்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹாங் காங் காவல்துறை ப்ரூஸ் லீயின் தந்தையை எச்சரித்தது. இனியும் இது போன்று நடந்தால் ப்ரூஸ் லீ சிறைச்சாலையில் கிடக்க வேண்டியது தான் என எச்சரித்தனர்.

மீண்டும் அமெரிக்கா

ஹாங் காங்கில் இருந்தால் ப்ரூஸ் லீ நிச்சயமாக கேங்ஸ்டராக மட்டுமே வர முடியும் என நினைத்த அவரது தந்தை அமெரிக்காவுக்கு ஒரு டிக்கெட் போட்டார்.

ப்ரூஸ் லீயை அமெரிக்கா அனுப்பி வைத்து குடும்ப நண்பரின் வீட்டில் தங்க வைத்தார் லீ ஹோய்-சூன்.

18 வயதில் அமெரிக்கா வந்த ப்ரூஸ் லீ ஒரு உணவகத்தில் வெயிட்டராக பணியாற்றினார்.

மேலும் சிலருக்கு தற்காப்பு கலைகளையும் பயிற்றுவித்து வந்தார்.

20 வயதில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படிக்கத் தொடங்கினார்.

படிக்கும் காலங்களில் ப்ரூஸ் லீக்கு அதீத விருப்பம் இருந்தது இரண்டு விஷயஙளில் தான்.

ஒன்று தற்காப்பு கலைகள். மற்றொன்று 3 புத்தகங்கள்.

தீவிரமான வாசிப்புப் பழக்கத்தையும் கொண்டிருந்தார் ப்ரூஸ் லீ.

அதே நேரத்தில் பல்கலைக்கழகம் முழுவதும் தனது தற்காப்பு கலைகளால் பெயர் பெற்றிருந்தார்.

ப்ரூஸ் லீயிடம் கராத்தே கற்றுக்கொள்ள பலரும் விரும்பியதால் 1963ம் ஆண்டு Lee Jun-fan கராத்தே பள்ளியை நிறுவினார்.

நாட்கள் நகர இந்த பள்ளியில் ஹாலிவுட் நடிகர்கள் பலரும் வந்து பயிற்சி பெற்றனர்.

அதே ஆண்டில் குணச்சித்திர நாயகனாக Marlowe என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு ப்ரூஸ் லீக்கு கிடைத்தது.

தொடர்ந்து தனது இரண்டாவது தற்காப்பு பள்ளியைத் தொடங்கினார் ப்ரூஸ் லீ.

ப்ரூஸ் லீ : பயமறியாத ஹீரோ

ப்ரூஸ் லீ தனது இரண்டாவது பள்ளியைத் தொடங்கியது ஆசிய தாற்காப்பு கலை மாஸ்டர்களை உறுத்தியது.

லீ சீனாவுக்கு சொந்தமான தற்காப்பு கலை ரகசியங்களை கசியவிடுவதாக அவர் மீது குற்றம் சுமத்தினர்.

சீன மாஸ்டர்கள் ப்ரூஸ் லீக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரைக் கொல்ல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ப்ரூஸ் லீ தனக்கென சொந்தமாக ஒரு முறையை உருவாக்கினார்.

 Jeet Kune Do என்ற அந்த தற்காப்பு கலையை குத்துச்சண்டை, குங்ஃபூ மற்றும் கராத்தேயிலிருந்து உருவாக்கினார் ப்ரூஸ் லீ.

ஒரு போட்டியில் அவரது ஒன் இன்ச் பன்ச் பரவலாக புகழப்பட்டது. ப்ரூஸ் லீக்கு ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கினர்.

சாகச கலைஞன்

ப்ரூஸ் திரைப்படங்களில் நடித்த காலத்தில் அவரது அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்குத் தான் அதிக ரசிகர்கள் இருந்தனர்.

ப்ரூஸ்லீயின் ஸ்டன்ட்களில் குறிப்பிடத்தக்க ஒன்று ட்ராகன் ஃப்லாக். அவரது 70 சதவீத உடலை அரை மணி நேரத்துக்கு எந்த ஆதரவும் இல்லாமல் காற்றில் வைத்திருக்க அவரரால் முடியும்.

Dragon fly
Dragon fly

ப்ரூஸ் லீயின் குத்துகளுக்கு தான் ரசிகர்கள் அதிகம். 3 அடி தூரத்தில் இருந்து ப்ரூஸ் லீ குத்தினால் எதிரில் இருப்பவர் 5-6 அடி தள்ளி விழுவார்.

ஒரு மனிதனால் எந்த அளவு சாகசங்களை செய்ய முடியும் என நாம் நினைக்கிறோமோ அதனை செய்து முடிக்க அவரால் முடியும்.

ப்ரூஸ் லீ மிக வேகமான எதிரிகளைத் தாக்கக் கூடியவர். அவரது அடி இடி மாதிரி இருப்பதற்கு மின்னல் வேகம் தான் காரணம் எனலாம்.

அந்த காலத்தில் தற்காப்பு கலைகளில் ப்ரூஸ் லீயை வெல்ல யாரும் இல்லை என்றே கூறலாம்.

ப்ரூஸ் லீ : குடும்பம்

ஆகஸ்ட் 17 1964ல் ப்ரூஸ் லீ லிண்டா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு ப்ரண்டன் லீ என்ற மகனும் ஷானன் லீ என்ற மகளும் அடுத்தடுத்து பிறந்தனர்.

பின்னாட்களில் நடிகரான ப்ரண்டன் லீ ஒரு படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மறைந்தார்.

ஷானன் லீ நீண்ட நாட்களுக்கு நடிகையாக வலம் வந்தார். இப்போது 53 வயதாகும் அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

ஆசிரியரான ப்ரூஸ் லீயின் மனைவி இப்போது ப்ரூஸ் லீ அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

தற்காப்பு கலைப் பள்ளிகள் நடத்திய காலத்தில் ப்ரூஸ் லீ க்ரீன் ஹார்னட் பேட் மேன் போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். இதன் மூலம் அவருக்கு பல நடிகர்களின் அறிமுகம் கிடைத்தது.

மருத்துவர்களைப் பொய்யாக்கினார்

1970ம் ஆண்டு அதிக பழு தூக்கியதனால் ப்ரூஸ் லீயின் முதுகெலும்பு உடைந்தது.

இதனால் இனி அவர் தற்காப்பு கலைகளைப் பயிற்சி செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால் அடுத்த சில நாட்களில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார் ப்ரூஸ் லீ.

ப்ரூஸ் லீ மிகத் தீவிரமாக தற்காப்பு கலைகளைப் பயிற்சி செய்வார். தன்னைத் தானே வருத்திக்கொண்டு மிகவும் பலம் வாய்ந்த மனிதனானார்.

ஒவ்வொரு நாளும் 2000 பன்ச்கள் 1000 கிக்கள் பயிற்சி செய்வாராம்.

தனது மகனுக்கும் சிறு வயதிலேயே தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கத் தொடங்கினார் ப்ரூஸ் லீ.

ஆக்ஷன் ஹீரோ

அமெரிக்காவில் இருந்து ஹாங் காங் சென்ற ப்ரூஸ் லீ, திரைப்படத் தயாரிப்பாளர் ரெய்மண்ட் சோ என்பவருடன் சேர்ந்து தி பிக் பாஸ் என்ற படத்தைத் தயாரித்தார்.

முதன் முதலாக ப்ரூஸ் லீ நாயகனாக நடித்த அந்த சீன படம் மிகப் பெரிய ஹிட் ஆனது.

முதல் படத்திலேயே ப்ரூஸ் லீயை எல்லாரும் ஹீரோவாக ஏற்றுக்கொண்டனர்.

அடுத்த ஆண்டு வெளியான Fist of Fury படமும் சக்கை போடு போட்டது.

அடுத்தடுத்து ப்ரூஸ் லீ தொட்டதெல்லாம் துலங்கியது.

20 நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க நபர் ப்ரூஸ் லீ தான் என்கிறது டைம்ஸ் பத்திரிக்கை.

கலாச்சார ரீதியில் மட்டுமல்லாமல் கலை ரீதியிலும் ஆசியாவும் மேற்கு உலகும் பிரிந்து தான் இருந்தன. ப்ரூஸ் லீதான் ஆசியாவுக்கும் மேற்குலகத்துக்கும் பாலமாக இருந்தார்.

1972ம் ஆண்டு தி வே ஆஃப் ட்ராகன் என்ற படத்தை இயக்கினார் ப்ரூஸ் லீ.

நடிகர் மட்டுமல்லாமல் இயக்குநர், எழுத்தாளர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் இருந்தார் ப்ரூஸ் லீ.

Bruce Lee : ஆசியாவையும் அமெரிக்காவையும் இணைத்த நாயகன் - ஓர் உத்வேக கதை!
தேச துரோகி முத்திரை, மரண தண்டனை: சூழ்ச்சியால் கொல்லபட்ட விஞ்ஞானியை ரஷ்யா கொண்டாடுவது ஏன்?

ப்ரூஸ் லீ மரணம்

ஹாலிவுட்டின் மிகப் பெரியத் தயாரிப்பாளரான வார்னர் பிரதர்ஸ் உடன் இணைந்து என்டர் தி ட்ராகன் என்ற படத்தை முடித்தார் ப்ரூஸ் லீ.

இந்த பட வெளியீட்டுக்கு 3 நாட்களுக்கு முன்னர் தனது அடுத்த படத்தின் கதையை விவாதிக்க பெட்டி டிங் என்ற நடிகையின் வீட்டுக்குச் சென்றார் ப்ரூஸ் லீ.

அப்போது தலை வலி அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளார். அவருக்கு மாத்திரைக் கொடுத்து தூங்க வைத்துள்ளார் நடிகை பெட்டி.

அது தான் அவரது கடைசி உறக்கம். அதிலிருந்து அவர் எழவே இல்லை. மருத்துவர்கள் அவருக்கு பெருமூளை வீக்கம் ஏற்பட்டது தான் உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறினர்.

ப்ரூஸ் லீ மரணத்தின் மீது பல கதைகள் கூறப்படுகின்றன.

Bruce Lee : ஆசியாவையும் அமெரிக்காவையும் இணைத்த நாயகன் - ஓர் உத்வேக கதை!
Holocaust என்றால் என்ன? - நடுங்க வைக்கும் ஒரு பயணம்

ப்ரூஸ் லீ மிகச் சிறிய வயதிலேயே மிகப் பெரிய உச்சங்களை எட்டியவர். 13 வயதில் மாஸ்டர் யிப்பிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கியது முதல் 32 வயதில் மரணமடைந்தது வரை ஒரு நாளும் தற்காப்பு கலைகளைப் பயிற்சி செய்ய அவர் மறக்கவில்லை.

எடைத் தூக்குவது, ஓட்டம், மல்யுத்தம், வாள் சண்டை, ஜூடோ, விங் சுன் மற்றும் குத்துச்சண்டை போன்ற பல்வேறு பயிற்சி முறைகளை இணைத்து புரூஸ் லீ பயிற்சி பெற்றார்.

இறுதி வரையிலும் தற்காப்பு கலைகளிலும் சினிமாவிலும் புதுமைகளை கொண்டுவந்தார்.

தன்னை அடித்த ரௌடிகளிடம் தோற்றுப் போய்விடக் கூடாது என்பதால் தற்காப்பு கலைகளைத் தொடங்கியவர். எங்குமே தோற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த உறுதி தான் அவரை ஹாலிவுட் ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடக் காரணம்.

தன்னைத் தானே வருத்திக்கொண்டு தனது சிறந்த தோற்றத்தை உலக்குக்குக் கொடுத்தார். இன்று சண்டைக்காரர்கள் சினிமாக்காரர்களைத் தாண்டி ஜெயிக்க நினைக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஹீரோவாக திகழ்கிறார்.

Bruce Lee : ஆசியாவையும் அமெரிக்காவையும் இணைத்த நாயகன் - ஓர் உத்வேக கதை!
Gregor Macgregor : ’இல்லாத ஊரின் இளவரசன்’ - பிரிட்டன் அரசை கலங்கடித்த தனி ஒருவனின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com